ஆபாச வீடியோவில் சிக்கிய டிஜிபி ராமச்சந்திர ராவ் சஸ்பெண்ட்

12

பெங்களூரு: பணியின் போது பெண்களுடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியான நிலையில், கர்நாடக போலீஸ் டி.ஜி.பி. அந்தஸ்தில் உள்ள ராமச்சந்திர ராவ் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார்.

கர்நாடக போலீஸ்துறையில் டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் உயரதிகாரி ராமச்சந்திர ராவ். இவர் பணியின் போது பல பெண்களுடன் அலுவலக அறையில் மிக நெருக்கமாக இருந்த வீடியோக்கள் அண்மையில் வெளியானது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோக்கள் பெரும் சர்ச்சையாக மாறியது.

வீடியோவை வெளியிட்டது யார் என்பது பற்றிய விவரங்கள் தெரியாத நிலையில், கர்நாடகா அரசு ராமச்சந்திர ராவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது;

ஒரு அரசு ஊழியருக்கு பொருந்தாத வகையில் ராமச்சந்திர ராவ் செயல்பட்டு உள்ளார். அரசிற்கு அவர் அவமானத்தையும் ஏற்படுத்தி உள்ளார். எனவே, அவரை முதல்கட்டமாக பணியில் இருந்து இடைநீக்கம் செய்வது என்று அரசு முடிவு எடுத்துள்ளது.

இவ்வாறு அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குள் சிக்கி இருக்கும் டிஜிபி ராமச்சந்திர ராவின் வளர்ப்பு மகள் ரன்யா ராவ். இவர், துபாயில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்திய வழக்கில் அதிகாரிகளால் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர். தங்கம் கடத்தலுக்கு உடந்தையாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ராமச்சந்திர ராவ் கட்டாய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர், நீண்ட நாட்கள் கழித்து குடிமை உரிமைகள் அமலாக்க பிரிவு டி.ஜி.பி,யாக நியமிக்கப்பட்டார்.

Advertisement