ஜார்ஜியா துாதராக அமித் குமார் மிஸ்ரா நியமனம்: மத்திய அரசு

புதுடில்லி: டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றிவரும் அமித் குமார் மிஸ்ரா, ஜார்ஜியாவுக்கான துாதராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டில்லியில் உள்ள வெளியுறவு அமைச்சகத்தின் தலைமையகத்தில் பணியாற்றிவரும் அமித் குமார் மிஸ்ரா, கடந்த 20024 ஆம் ஆண்டு பேட்ச்சை ஐஎப்எஸ் அதிகாரி ஆவார்.

ஜார்ஜியாவுடனான இந்தியாவின் ராஜதந்திர உறவுகளை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக இந்த நியமனம் பார்க்கப்படுகிறது. முன்னதாக, ஆர்மீனியாவுக்கான இந்தியத் தூதரே ஜார்ஜியாவுக்கும் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் அமித் குமார் மிஸ்ரா ஜார்ஜியாவுக்கான துாதரா நியமிக்கப்பட்டுள்ளார்.
அமித் குமார் மிஸ்ரா,விரைவில் ஜார்ஜியாவின் தலைநகரான திபிலீசியில் தனது புதிய பொறுப்பை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement