மதுரையில் சமத்துவ பொங்கல் விழா

1


மதுரை: மதுரை மாவட்டம் திருவாதவூர் செயல்பட்டு வரும் இந்திய அரசு கல்வி நிறுவனம், மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், மதுரை சிப்பெட் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா, பெரும் விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இவ்விழா சிப்பெட் மதுரை நிர்வாக இயக்குனர் பிரகலாதன் தலைமையில் நடைபெற்றது. தமிழக பாரம்பரிய உடைகளை அணிந்து வந்தனர். இதில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகள் நடைபெற்றன. தமிழக பாரம்பரிய விளையாட்டுகளான பொங்கல் வைத்தல், பானை உடைத்தல், சிலம்பம், கரகாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம், பறை முழுங்குதல் போன்ற நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடினர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement