இந்தியா உடன் விரைவில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன் தலைவர் நம்பிக்கை

4


டாவோஸ்: '' வர்த்தக ஒப்பந்தத்திற்கு தாய் என பலரால் அழைக்கப்படும் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து ஆகும்,'' என ஐரோப்பிய யூனியன் தலைவர் உர்சுலா வோன் டெர் லேயன் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இந்தியா உடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இன்னும் சில பணிகள் உள்ளன. அதே நேரத்தில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இது அனைத்து ஒப்பந்தங்களின் தாய் என சிலர் கூறுவர். இது 200 கோடி மக்கள் கொண்ட சந்தையை உருவாக்கும். இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட கால்பங்கை கொண்டு இருக்கும்.


டாவோசில் நடக்கும் உலகப் பொருளாதார மாநாடு முடிந்ததும் இந்தியா செல்ல உள்ளேன். பெரிய வர்த்தக ஒப்பந்தத்தை விரைவுபடுத்தும் வகையில் இந்த பயணம் இருக்கும். இந்தியா ஐரோப்பா இடையே பொருளாதார ஒப்பந்தத்தை வலிமைப்படுத்தவும், ஒத்துழைப்பை வலிமைப்படுத்தவும் ஏராளமான பணிகளை செய்ய வேண்டி உள்ளது.


உலகத்தை எப்போதும் ஐநா தேர்வு செய்யும். ஐரோப்பாவை தேர்வு செய்ய உலகம் தயாராக உள்ளது.

கிரீன்லாந்து விவகாரத்தில் ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதிப்பது தவறு. நீண்ட கால நட்பு நாடுகள் மீது வரி விதிப்பது தவறான முடிவாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement