3 லட்சம் பயணிகள் பாதிப்பு: இண்டிகோ மீது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கடுமையான நடவடிக்கை

புதுடில்லி: டிசம்பர் 2025-ல் இண்டிகோ விமான நிறுவனம் சந்தித்த செயல்பாட்டு இடையூறுகள் தொடர்பாக, சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது.

கடந்த ஆண்டில் டிசம்பர் 3 முதல் 5 ஆம் தேதி வரை இண்டிகோ, 2,507 விமானங்களை ரத்து செய்தும் 1,852 விமானங்களை தாமதப்படுத்தியது. இதனால் இதனால் சுமார் 3 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் கண்டுடறிந்தது.
சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளதாவது:
திட்டமிடுதல் குறைபாட்டால் போதிய அவசரகால கையிருப்பு இல்லாமல் விமானங்களை இயக்கியது. விமானிகளுக்கான புதிய பணி நேர விதிகளை முழுமையாக அமல்படுத்தாதது,விமானிகள் மற்றும் பணியாளர்களைப் பணிக்கு அமர்த்தும் சாப்ட்வேரில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக பல்வேறு விதிமீறல்களுக்காக இண்டிகோ நிறுவனத்திற்கு ரூ.22.20 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.


முறையான சீர்திருத்தங்களை உறுதி செய்ய ரூ.50 கோடி வங்கி உத்தரவாதம் சமர்ப்பிக்க இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி, மற்றும் செயல்பாட்டு அதிகாரிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இது தொடர்பாக இண்டிகோ வெளியிட்ட அறிக்கை:தற்போது செயல்பாடுகள் சீராகியுள்ளது.பிப்ரவரி 10 முதல் விமான ரத்துக்கள் முழுமையாக தவிர்க்கப்படும். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு வழங்கப்பட்ட ரீபண்ட் தொகையுடன் கூடுதலாக, ரூ.10,000 மதிப்பிலான வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு இண்டிகோ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Advertisement