ஆந்திராவில் அரசு பஸ்களில் 50 லட்சம் பேர்; ஒரே நாளில் ரூ.28 கோடி வருவாய் ஈட்டி சாதனை
ஹைதராபாத்: ஆந்திரா அரசு பஸ் போக்குவரத்து கழகம் ஒரே நாளில் அதிகபட்சமாக ரூ.28 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைத்துள்ளது.
ஆந்திராவில் சங்கராந்தி பண்டிகை முடிந்து பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் பஸ்களில் திரும்பினர். கூட்டம் அதிகம் என்ற காரணத்தால் ஆந்திர அரசு பஸ் போக்குவரத்து கழகம் ஏராளமான சிறப்பு பஸ்களை பயணிகளுக்காக இயக்கியது.
பயணிகளுக்காக இயக்கப்பட்ட இந்த சிறப்பு பஸ்களில் வழக்கத்துக்கு மாறாக அதிகம் பேர் பயணித்தனர். குறிப்பாக ஜன.19ம் தேதி இதுவரை இல்லாத அளவு அன்று ஒரு நாளில் மட்டும் போக்குவரத்து கழகம் ரூ.27 கோடியே 68 கோடி வருவாய் ஈட்டி இருக்கிறது. கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் அதிகமானோர் அன்றைய நாளில் மட்டும் பஸ்சில் பயணித்துள்ளனர்.
இதுகுறித்து ஆந்திர பிரதேச அரசு போக்குவரத்து கழக இயக்குநர் துவாரகா கூறியதாவது;
ஆந்திர பிரதேச போக்குவரத்துக் கழகம் ஜன.19ம் தேதி ரூ.27.68 கோடி வருவாய் ஈட்டி உள்ளது. இது வரலாற்றில் இதுவரை கண்டிராத மைல் கல்லாகும். கிட்டத்தட்ட 50 லட்சத்துக்கும் அதிகமானோர் அந்த நாளில் அரசு பஸ்களில் பயணம் செய்துள்ளனர்.
அனைத்து ஊழியர்களின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது. போக்குவரத்து கழகத்திற்கு ஆந்திர மக்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. எதிர்காலத்திலும் இதே போன்ற ஆதரவை அவர்கள் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அரசு போக்குவரத்து கழக இயக்குநர் துவாரகா கூறினார்.
மேலும்
-
அமைச்சர் நேரு துறையில் பணியிட மாறுதலுக்கு ரூ.366 கோடி லஞ்சம்: டி.ஜி.பி.,க்கு ஈ.டி., கடிதம்
-
டெக்னிக்கல்அனாலிசிஸ் 25,100- புள்ளிகளில் சப்போர்ட் கிடைக்கலாம்
-
10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு
-
பொங்கல் பரிசு வாங்க முடியாமல் தவிக்கும் வெளியூர் வாசிகள்
-
மத்திய அரசு ஊழியருக்கு எதிரான ஊழல் புகாரை மாநில போலீசார் விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்
-
முஸ்லிம் நாடுகளுடன் சேர்ந்து 'இஸ்லாமிய நேட்டோ' அமைக்க பாகிஸ்தான் முயற்சி