எமிரேட்ஸ் என்.பி.டி. வசமாகிறது ஆர்.பி.எல். வங்கி

புதுடில்லி, ஜன. 21--

துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எமிரேட்ஸ் என்.பி.டி வங்கி, இந்தியாவின் தனியார் வங்கியான ஆர்.பி.எல்., பேங்க்கை கையகப்படுத்த, சி.சி.ஐ., எனப்படும் இந்திய வணிகப்போட்டி ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2025 அக்டோபரில் எமிரேட்ஸ் என்.பி.டி வங்கியும் ஆர்.பி.எல் வங்கியும் இணைந்து, இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அத ற்கு, சி.சி.ஐ., தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, கிட்டத்தட்ட 27,000 கோடி அளவுக்கு முதன்மை முதலீடு வாயிலாக ஆர்.பி.எல்., வங்கியின் பங்குகள் வாங்கப்பட உள்ளன.

Advertisement