ரூ.72 லட்சம் வரி பாக்கி: அதிர்ந்த கூலி தொழிலாளி

3

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்டம், பார்சம்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேஷ், 43; கூலி தொழிலாளி. இவருக்கு சில நாட்களுக்கு முன், ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் இருந்து நோட்டீஸ் வந்தது.


அதில், 'வெங்கடேஸ்வரா டிரேடர்ஸ்' என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருவதாகவும், அதன் நிலுவையிலுள்ள, 72 லட்சம் ரூபாய் ஜி.எஸ்.டி., வரியை உடனே செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.


அதிர்ச்சியடைந்த வெங்கடேஷ், திருப்பத்துார் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனுவில், 'குடும்பத்தை கூலி வேலை செய்து பராமரிக்கிறேன். என் பான், ஆதார் அட்டையை வைத்து, யாரோ, இதுபோன்ற செயலில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டுள்ளார்.

Advertisement