பொங்கல் பரிசு வாங்க முடியாமல் தவிக்கும் வெளியூர் வாசிகள்
ஸ்ரீவில்லிபுத்துார்: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்ட ரூ. 3 ஆயிரத்தை, தொலைதூர நகரங்கள், வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள் நேரில் வந்து வாங்கிச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். இதற்கு தமிழக அரசு மாற்று வழியை அறிவிக்க வேண்டும் என எதிர் பார்க்கின்றனர்.
தமிழகத்தில் 2.22 கோடி அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ 3 ஆயிரம் ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ஆகியவைகளை வழங்க அரசு அறிவித்தது. ஜன.8 முதல் ஜன. 14 வரை பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டது.
96 சதவீதம் பேருக்கு பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட நிலையில், இதுவரை வாங்காதவர்களும் நேற்று வரை ரேஷன் கடைகளில் வாங்கி சென்றனர்.
இருந்தபோதிலும் சொந்த ஊரில் ரேஷன் கார்டு வைத்திருக்கும் நிலையில் தொலைதூர நகரங்கள், வெளிமாநிலங்களில் வசிப்பவர்கள், திருமணம் முடிந்து தங்களது குடும்பத்திலிருந்து பிரிந்து புதிய ரேஷன் கார்டு வாங்க விண்ணப்பித்தவர்கள், 10 ஆண்டுகளில் ரேஷன் கார்டு வைத்திருந்து உயிரிழந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என 3 சதவீதம் பேர் இன்னும் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்க முடியாத நிலையில் உள்ளனர். ஒவ்வொரு கடையிலும் குறைந்தது 10 முதல் 50 பேர் வரை இவ்வாறு இருப்பதாக ரேஷன் கடை ஊழியர்கள் கூறுகின்றனர்.
எனவே, தங்களது வங்கி கணக்கில் ரூ. 3 ஆயிரத்தை வரவு வைத்தோ அல்லது தங்களின் சம்மத கடிதத்தின் பேரில் உறவினர்களிடம் வழங்கவோ தமிழக அரசு வழி ஏற்படுத்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக உணவு வழங்கல் துறை இயக்குநர் சிவராசு கூறுகையில், ''இதுவரை பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள், ரேஷன் கடைகளுக்கு சென்று, பரிசு தொகுப்பை வாங்கி கொள்ளலாம்,'' என்றார்.
பொங்கல் இனாம் என்று வாங்கித்தான் பொங்கல் கொண்டாட வேண்டிய நிலையில் ஒரு இனம் இருக்கிறது என்றால் - அந்த இனத்தை இன்னும் பிச்சை எடுக்கும் சமூகமாகவே பார்க்கவேண்டும். அப்படி ஒரு பொங்கல் தேவையா?மேலும்
-
தத்துவத்தை சட்டமாக்க முடியாது; சமூகம் கடைபிடிக்க வேண்டும்; குறளாசிரியர் மாநாட்டில் அறிவுறுத்தல்
-
திமுகவை வீழ்த்த ஒரே குடும்பமாக செயல்படுவோம்: தினகரன் சந்திப்பில் பியுஷ் கோயல் உறுதி
-
டிரம்ப் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு; அவசரமாக தரையிறக்கினார் விமானி
-
வங்கதேசத்தில் அசாதாரண சூழல்... இந்திய அதிகாரிகளின் குடும்பங்களை திரும்ப அழைத்தது மத்திய அரசு
-
மீண்டும் தேஜ கூட்டணியில் அமமுக: தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு
-
வேறு தொகுதி வாக்காளர் சேர்ப்பு கரூரில் மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு