வேறு தொகுதி வாக்காளர் சேர்ப்பு கரூரில் மாஜி அமைச்சர் குற்றச்சாட்டு
கரூர்: ''கரூர் தொகுதியில் வேறு தொகுதி, வேறு மாவட்ட வாக்கா-ளர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர்,'' என, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இது தொடர்பாக, கரூர் மாவ ட்ட கலெக்டர் தங்கவேலுவிடம், மனு அளித்த விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஓட்டுச்சாவடி மையத்தில் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் சேர்த்தல், நீக்கம் தொடர்பாக பெறப்பட்ட விண்ணப்ப படிவம் குறித்து பட்டியல் கேட்கப்பட்டது. ஆனால், முகவரி மட்டும் குறிப்பிட்டு பட்டியல் கொடுக்கின்றனர். அதில், மொபைல் எண், எந்த பாகத்தை சேர்ந்தவர்கள் என்ற விபரம் இல்லை. அதை கண்-டுபிடிப்பது சிரமமாக உள்ளது. வேறு தொகுதியில் இருக்கும் வாக்-காளர்களை, கரூர் தொகுதியில் சேர்க்கின்றனர்.
முகவரி மாற்றத்திற்கு கொடுத்த அடையாளத்தின் சான்று வைத்து சோதனை செய்தால், அந்த முகவரியில் வேறு நபர் வசிக்-கிறார். வேறு மாவட்ட வாக்காளர்களும், இந்த தொகுதியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இதுபோல, வேறு ஊருக்கு சென்று விட்டவர்களும் பெயர்களும் நீக்காமல் உள்ளது.
இது குறித்து சான்றுகளுடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின், ஆளும் கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதியவாக்காளர்களை சேர்த்தால், எப்படி புகார் அளிப்பது என்பது குறித்து தெளிவான விளக்கம் இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
தங்கம் விலை தாறுமாறாக உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3600 அதிகரிப்பு
-
அதிபர் டிரம்ப் VS கனடா பிரதமர் கார்னி; அமைதி வாரியத்தில் சேர விடுத்த அழைப்பு வாபஸ்
-
டில்லி - புனே சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
-
மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது முதல்கட்டத்தில் 33 கேள்விகள்; என்னென்ன தெரியுமா?
-
ஆயுதங்களை தூக்கியெறிந்து விட்டு... நக்சல்களுக்கு அமித் ஷா இறுதி எச்சரிக்கை
-
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்த விவகாரம்; முதல்முறையாக இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை