டெக்னிக்கல்அனாலிசிஸ் 25,100- புள்ளிகளில் சப்போர்ட் கிடைக்கலாம்

துவக்கத்தில் இருந்தே இறக்கத்தில் நடைபெற்ற நிப்டி, நாளின் இறுதியில் 353 புள்ளிகள் இறக்கத்துடனேயே நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16-ம் இறக்கத்துடன் நிறைவடைந்தன. இவற்றில் 'நிப்டி மிட்கேப் 100' குறியீடு குறைந்தபட்சமாக 1.53 சதவிகித இறக்கத்துடனும்; 'நிப்டி ஸ்மால்கேப் 100' குறியீடு அதிகபட்சமாக 2.85 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது. 19 துறை சார்ந்த குறியீடுகளும் இறக்கத்துடன் நிறைவடைந்தன. 'நிப்டி பிரைவேட் பேங்க்' குறியீடு குறைந்தபட்சமாக 0.96 சதவிகித இறக்கத்துடனும் நிப்டி ரியால்ட்டி குறியீடு அதிகபட்சமாக 5.04 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
Latest Tamil News Latest Tamil News
Latest Tamil News
Latest Tamil News
Latest Tamil News

வர்த்தகம் நடந்த 3,307 பங்குகளில், 538 ஏற்றத்துடனும்; 2,684 இறக்கத்துடனும்; 85 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி முக்கிய குறுகிய கால சராசரிகளுக்கு கீழே சென்றுள்ள படியால், டெக்னிக்கலாக குறுகிய கால அளவீட்டில் இறக்கம் தொடர வாய்ப்புள்ளது. இருப்பினும், மொமெண்டம் இண்டிகேட்டர்கள் சற்று பலகீனமடைந்துள்ளன. ஆர்.எஸ்.ஐ., 'ஓவர் சோல்டு' எனும் நிலைக்குள் நுழைந்துள்ளது. இதனால் டெக்னிக்கலாக சிறியதொரு மீட்சி வருவதற்கான வாய்ப்புள்ளது. இது நடக்க செய்திகள் சாதகமாக இருக்கவேண்டும்.
தற்போதைய சூழலில் முக்கிய சப்போர்ட் என்பது 25,100 என்ற லெவலில் இருக்கிறது. இதைத் தாண்டி இறங்கினால் 24,800 வரை சென்று திரும்புவதற்கான வாய்ப்பு டெக்னிக்கலாக இருக்கிறது.

Advertisement