தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி; ஆட்சியில் கிடையாது

1

@quote@ தி.மு.க.,வை ஆட்சியிலிருந்து அகற்ற ஒரு கூட்டணி தேவை என்பதை உணர்ந்து, பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூட்டணி அமைத்துள்ளார்.
யார் யாரை கூட்டணியில் சேர்க்க வேண்டும் என பழனிசாமி நினைக்கிறாரோ, அவர்களோடு தான் கூட்டணி; இதில் மாற்றம் கிடையாது. கூட்டணி என்பது தேர்தலுக்காக மட்டுமே தவிர, ஆட்சியில் பங்கு என்பதெல்லாம் பேச்சே கிடையாது. அதில், பழனிசாமி உறுதியாக உள்ளார்.

தமிழகத்தில், கடந்த, 1924ம் ஆண்டு முதல், இதுவரை கூட்டணி ஆட்சி நடந்ததே கிடையாது. அதேபோல், 2026ம் ஆண்டிலும் கூட்டணி ஆட்சிக்கு இடமில்லை.

பழனிசாமி தலைமையில், அ.தி.மு.க., தனித்து ஆட்சி அமைக்கும். 'அ.தி.மு.க., அடிமை கட்சி' என, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார், அடிமை கட்சி என்றால் கடந்த லோக்சபா தேர்தலில் எப்படி தனித்து போட்டியிட்டிருப்போம்? அ.தி.மு.க., தனியாக ஒரு கூட்டணி அமைத்து துணிச்சலாகத்தானே அந்த தேர்தலில் போட்டியிட்டோம்.

ஓசூரில் ஏற்கனவே பெரிய அளவில் தனியார் விமான நிலையம் உள்ளது. அதை சீரமைத்து, பன்னாட்டு விமான நிலையமாக உருவாக்க முடியும்.

- தம்பிதுரை, கொள்கை பரப்பு செயலர், அ.தி.மு.க.,quote

Advertisement