நியூசிலாந்தில் பயங்கர நிலச்சரிவு; சுற்றுலாப் பயணிகள் மண்ணுக்குள் சிக்கி மாயம்
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி, பெண்கள், குழந்தைகள் என ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மாயமாகியுள்ளனர்.
நியூசிலாந்தின் வடக்கு பகுதி மாகாணங்களில் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால், மாங்கனுய் எரிமலையில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால், மலையின் அடிவாரத்தில் முகாம் அமைத்து தங்கியிருந்த பெண்கள், குந்தைகள் என ஏராளமான சுற்றுலாப்பயணிகள் மண்ணுக்குள் அடியில் சிக்கியுள்ளனர். தங்களைக் காப்பாற்றுமாறு உதவி கேட்டு சில குரல்கள் கேட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
அவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டனர். இருப்பினும், மீண்டும் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருந்ததால், மீட்புக் குழுவினர் தற்காலிகமாக அங்கிருந்து வெளியேற வேண்டியிருந்தது.
இது குறித்து போலீசார் கூறியதாவது; நிலம் சரிந்து கொண்டிருக்கும் போதே, மீட்புக் குழுவினர் மீட்பு பணிகளை தொடங்கி விட்டனர். காணாமல் போனவர்களின் எண்ணிக்கையை சரியாக சொல்லிவிட முடியாது. ஆனால், நிறைய பேர் சிக்கியுள்ளனர், என்று அவர் தெரிவித்தார்.
மண்ணுக்குள் புதைந்தவர்கள் உயிருடன் மீட்கப்படவேண்டும். மற்றவர்கள் வேறு அபாயம் இல்லாத இடங்களுக்கு மாற்றப்படவேண்டும்.
திருட்டு மாடல் waiting to compensate with 2 crores for the deceasedமேலும்
-
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
ராகுல் மீது அதிருப்தி; காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த சசிதரூர்
-
தமிழகத்திற்கு ரூ.3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆமதாபாத், நொய்டாவில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்
-
மிகப்பெரிய உத்வேகம் கொடுப்பவர் நேதாஜி; பிரதமர் மோடி
-
பிரதமர் மதுராந்தகம் வருகை; தேசிய நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்