ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாஜவுக்கு கோபமில்லை; கனிமொழிக்கு என்னதான் பிரச்னை: கேட்கிறார் அண்ணாமலை
சென்னை: ''பாஜவுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் என்ன சம்பந்தம்? அவர் மீது பாஜவுக்கு எந்த கோபமும் இல்லை. அவர் கருத்து அவருடையது. எங்கள் கருத்து எங்களுடையது. இதில் திமுக எம்பி கனிமொழிக்கு என்ன தான் பிரச்னை,'' என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: தமிழக துணை முதல்வர் உதயநிதியை நீதிபதி எவ்வளவு கடுமையாக சாடி இருக்கிறார் என்பது தெரியும். உயர் நீதிமன்றத்தின் கண்டிப்பை தொடர்ந்து உதயநிதி துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும். உதயநிதியின் பேச்சு இனப்படுக்கொலைக்கு ஆதரவானது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திமுகவுக்கு ஒத்து ஊதும் இயக்கமாக கம்யூனிஸ்ட் மாறிவிட்டது. கறிக்கோழி பிரச்னைக்கு திமுக அரசே காரணம். ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த பேட்டியை நான் பார்த்தேன்.
இசைமேதை
@quote@ரஹ்மானை பொறுத்தவரை ஒரு இசைமேதை. தமிழத்தின் அடையாளம். இந்தியாவில் ஒரு இசையமைப்பாளர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கிறார் என்றால் ஏ.ஆர்.ரஹ்மான் ஒருவர் தான். quote
எங்கு போனாலும் கூட மேடையில் தமிழ் மொழியில் தான் பேசுவார். எல்லா புகழும் இறைவனுக்கு என்று சொல்லி நம்மை தொடர்ந்து பெருமைப்படுத்தி கொண்டிருக்கும் மனிதர். அவர் பேசியதில் ஒரு வரியை எடுத்து, அதை ஏது ஏதோ பண்ணி தேவையில்லாமல் சிலர் பிரச்னை செய்கிறார்கள்.
அதில் எனக்கு உடன்பாடு இல்லை. காரணம் எல்லோருக்குமே அவர்கள் பேசுவதற்கான கருத்து வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் சுதந்திரமாக பேசலாம். பேசட்டும் ஒன்றும் தவறு கிடையாது. ஏஆர் ரஹ்மானை பொறுத்தவரை இன்றைக்கு ராமாயணம் படத்துக்கும் ஹான்ஸ் சிம்மர் உடன் இசை அமைக்கிறார்.
ஹான்ஸ் சிம்மர் ஒரு சாதாரண ஆள் இல்லை. உலகத்தின் முதன்மை இசையமைப்பாளர். ஏர்ஆர் ரஹ்மானை பொறுத்தவரை எல்லாவிதமான படத்திற்கும் இசை அமைக்கிறார். அவர் சொல்லி இருப்பது சினிமா துறையில் அதிகார மாற்றம் எப்படி இருக்கிறது, குறிப்பாக கடந்த 10 ஆண்டுகளில் மாறி இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
அது அவருடைய கருத்தாக தான் நான் பார்க்கிறேன். அவர் பாஜ பின்னணயில் இருக்கிறது என்று எங்குமே சொல்லவில்லை. அந்த முழு பேட்டியையும் நான் பார்த்தேன். நான் ஏஆர் ரஹ்மானின் ரசிகன். எப்படி இளையராஜாவை மதிக்கிறேனோ, அப்படி ஏஆர்.ரஹ்மானையும் மதிக்கிறேன். அவருடைய கருத்தாக தான் பார்க்கிறேன்.
ஒருத்தர் பேசும் கருத்துக்கு எல்லாம் எல்லோரும் எப்படி கோபப்பட்டு பேசலாம் என்றால் இந்த நாட்டினை நடத்த முடியாது. எதிர்க்கருத்துகளும் இருக்கட்டும். ஏஆர்.ரஹ்மான் பேசிய கருத்து சரி, தவறு என்று நான் சொல்லவில்லை. அந்த கருத்தை பேசுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது என்று தான் நான் சொல்கிறேன்.
அதேநேரத்தில், ஏஆர் ரஹ்மான் ஒரு விளக்கத்தை கொடுத்த பிறகு, இந்த பிரச்னை முடிந்ததாக பார்க்கிறேன். ஏஆர்.ரஹ்மானை பொறுத்தவரை அவர்களை புண்படுத்த வேண்டாம், கிரியேட்டிவ் பீல்டில் இருக்கிறார்கள். இன்னும் பெரிய இசைகளை எல்லாம் அவர்கள் வெளியிட வேண்டும்.
என்ன பிரச்னை?
மக்களை மகிழ்விக்க வேண்டும். தமிழகத்தின் அடையாளமாக தொடர்ந்து திகழ வேண்டும். கிரியேட்டிவ் பீல்டில் இருப்பவர்கள் எல்லோருக்கும் கருத்து சொல்வதற்கு உரிமை இருக்கிறது. அந்த கருத்து எனக்கு சில இடத்தில் உடன்பாடாக இல்லை என்றால் அவர்களை தீட்டி தீர்க்க எனக்கு உரிமை இல்லை. இதில் கனிமொழிக்கு என்னதான் பிரச்னை என்று தெரியவில்லை.
பாஜவுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் என்ன சம்பந்தம்? அவர் மீது பாஜவுக்கு எந்த கோபமும் இல்லை. அவர் கருத்து அவருடையது. எங்கள் கருத்து எங்களுடையது. எங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் மீது மதிப்பும் மரியாதையும் இருக்கும் போது, சில அரசியல்வாதிகள் ஏன் பாஜ VS ஏஆர்ரஹ்மான் என்று மாற்ற பார்க்க வேண்டும். அது அவசியமே இல்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
@block_P@
இது குறித்து திமுக எம்பி கனிமொழி வெளியிட்டு இருந்த பதிவில் கூறியிருப்பதாவது: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்னுடைய ஆதரவை தெரிவிக்கிறேன். மதம், மொழி மற்றும் அடையாளத்திற்கு அப்பாற்பட்ட கலைகளைக் கொண்ட ஒரு இசைக்கலைஞரை வேண்டுமென்றே குறிவைத்து தாக்குவதும், இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மவுனமும் மிகவும் கவலையளிக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த நாட்டின் இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு படைப்பாளி மற்றும் கலைஞர், அதே நேரத்தில் இந்தியாவின் கலாசாரம் மற்றும் இந்திய விழுமியங்களை கொண்டு சேர்த்த முன்னணி தூதரும் ஆவார்.
அவர் பாரபட்சம் மற்றும் வெறுப்புக்கு அல்ல, மரியாதை மற்றும் நன்றியுணர்வுக்கு தகுதியானவர். இத்தகைய சகிப்புத்தன்மையற்ற தன்மைக்கு ஒரு ஜனநாயக மற்றும் பன்முக சமூகத்தில் இடமில்லை. இவ்வாறு கனிமொழி வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளார்.block_P
ஒரு சிறிய தீப்பொறியை, ஊதி பெரியது ஆக்கப்பார்க்கிறார். அதில் தான் குளிர் காய பார்க்கிறார். தேர்தல் வந்து விட்டதல்லவா. பெரியாதாகப் பேசத் தெரியாவிட்டால் சின்னதாய் இருப்பதை பெரிதாக்கப் பார்ப்பது சின்னத்தன்மைதான்.
பைத்தியம் பிடித்து விட்டது. அதுதான் பிரச்சனை.
குடிப்பிறப்பும் பிரச்சினை.. வெளியே சொல்லிக் கொள்வது இயலாத ஒன்று..
குப்பை தொட்டிக்கு குப்பை மட்டுமே தெரியும்
பயங்கரவாதி தாவூத் இப்ராஹீம் பிடியில் எல்லாம் ஹிந்தி சினிமா இருக்கலாம் அப்பவெல்லாம் ரகுமானுக்கு வாயில் என்னவோ இருந்தது ஆக மொத்தம் எல்லாம் முல்லா குல்லா பிடியில் இருந்தால் இந்தியாவில் அமைதி இருக்குது இல்லன்னா குய்யோ முய்யோ ன்னு கத்த வேண்டியது அண்ணாமலை எல்லாரையும் அரவணைக்க க்கூடியவர் அதனால் இப்டி பேசுறார்
தொடர்ந்து மீடியா புகழ் வெளிச்சத்தில் இருக்க பல விஐபிக்கள் ஏதாவது பேசுவர், பதிவிடுவர். அது சர்ச்சை பேசு பொருளாக ஆவதை ரசிப்பர். மற்றபடி ரஹ்மான் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் எதிரி. ஹிந்து கலைஞர்களையே அதிகம் அறிமுகப்படுத்தி பயன்படுத்துபவர். சினிமாவில் எல்லோரையும் ( மறைமுக)விளம்பரம்தான் பிழைக்க வைக்கும். வேற வழி?
நல்ல ஜோக்
கான்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருந்த போதெல்லாம் பாலிவுட் தாவூத் பிடியில் இருந்தது.
தீயசக்தி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கோலிவுட் ஒரு குறிப்பிட்ட குடும்ப ஆட்சியின் பிடியில் இருக்கிறது.
இதையெல்லாம் மறைத்து கனிமொழி பேசுவதுதான் தவறாக இருக்கிறது.
தெளிவான பேச்சு இதெல்லாம் அவங்களுக்கு புரியாது குட்டையை குழப்புவது தான் மாடல்
கனிமொழி தெளிவான பேச்சு??
குட்டையை குழப்புவது
எல்லோருக்கும் தெரியுமே??
அண்ணாமலை பரவாயில்ல.
நெற்றியில் விபூதி வைத்திருந்தால் வீட்டுக்குள் வரக்கூடாது ...விபூதியை அழித்துவிட்டு வரவும் என்று கவிஞரிடம் ஆத்தா சொன்னாராம் ....இதை அந்த கவிஞரே சொல்றாரு....அப்பேர்பட்ட இசை மேதை இப்போது மதவாதம் வகுப்புவாதம் என்று பேசறார் ...இதுக்கு திராவிட கவிதாயினி ஆதரவு ...
யார் யாரோ புயஸ் கோயல் ஐ சந்திக்கிறார்கள், உங்களை எடப்பாடி அந்த சைடு வரவே கூடாது கண்ணில் படவே கூடாது என்று சொல்லி விட்டாராமே, அது தான் எங்களுக்கு பிரசனை எப்படி இருந்த நீர் இப்படி மனசு கஷ்டமா இருக்கு
சீமான் சொல்வதுதான் நினைவுக்கு வருகிறது .
தங்கத்தை குப்பையில் வீசினால் வீசியவர்கள் தான் வருத்தப்பட வேண்டும் தங்கம் எப்பொழுதும் ஜொலித்துக் கொண்டுதான் இருக்கும் எங்கள் தங்கம் அண்ணாமலை அவர்கள்
ஆஹா அப்போ நமக்கு சந்தோஷம்தான்
200ரூவா அவர் சொன்ன கருத்துக்கு கருத்து சொல். ஓசில கெடச்சுதுன்னு அடிச்சிட்டு வாய்க்கு வந்ததல்லாம் பேச கூடாது
ஏல டுபா ஆகுர் கேட்டங்கேள்விக்கு பதில் சொல்ல வக்கில்லையே
அப்படி கஷ்டமா இருந்தா ............... ......... சீமான் சொன்னதை நினைவுபடுத்திக்கொள்
கனிமொழி சொல்வதை எல்லாம்
கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவசியம் இல்லை.ஏன் என்றால் இதற்கு முன் ஊடகங்களுக்கு கொடுத்த பேடியே சான்றுமேலும்
-
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
ராகுல் மீது அதிருப்தி; காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த சசிதரூர்
-
தமிழகத்திற்கு ரூ.3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆமதாபாத், நொய்டாவில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்
-
மிகப்பெரிய உத்வேகம் கொடுப்பவர் நேதாஜி; பிரதமர் மோடி
-
பிரதமர் மதுராந்தகம் வருகை; தேசிய நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்