மாரியம்மன் திருவிழாவுக்கு 28ல் ஆலோசனை கூட்டம் 

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழாவுக்கான ஆலோசனை கூட்டம் வரும், 28ம் தேதி கோவிலில் நடைபெற உள்ளது.

உடுமலை நகரிலுள்ள மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்தாண்டு திருவிழாவுக்கு, வரும் மார்ச் 23ல், நோன்பு சாட்டப்பட்டு, மார்ச் 31ல், கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், ஏப்., 9ல், திருத்தேரோட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் செய்வதற்கான ஆலோசனை கூட்டம், வரும் 28ம் தேதி மாலை, 5:00 மணிக்கு கோவிலில் நடைபெறும் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Advertisement