பிரதமர் மதுராந்தகம் வருகை; தேசிய நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்

செங்கல்பட்டு: மதுராந்தகம் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று பங்கேற்க உள்ளதால், தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.


செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை: மதுராந்தகத்தில் தேசிய நெடுஞ்சாலை அருகே, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி சார்பில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். இதனால், காலை 7:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, சென்னை - திருச்சி செல்லும் வாகனங்கள் வண்டலுார், கேளம்பாக்கம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று, மரக்காணம் வழியாக திண்டிவனம் சாலையை அடையலாம்.

வண்டலுார், படப்பை ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக வந்தவாசி, தெள்ளார், வெள்ளிமேடுபேட்டை, தீவனுார், கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாக செல்லலாம். ஸ்ரீபெரும்புதுார், ராணிப்பேட்டை, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை, திருக்கோவிலுார், விழுப்புரம் வழியாகவும் செல்லலாம்.

திருச்சி - சென்னை செல்லும் கனரக வாகனங்கள்





* திருச்சியிலிருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் உளுந்துார்பேட்டை, மடப்பட்டு வழியாக திருக்கோவிலுார், திருவண்ணாமலை, வந்தவாசி, காஞ்சிபுரம் பாலாறு செவிலிமேடு சந்திப்பு, கீழம்பி புறவழிச்சாலை வழியாக செல்லலாம்.

* சேலத்திலிருந்து சென்னை மார்க்கமாக செல்ல வேண்டிய கனரக வாகனங்கள், பிரித்வி மங்களம் வழியாக தியாகதுர்கம், மணலுார்பேட்டை, திருவண்ணாமலை, வந்தவாசி, காஞ்சிபுரம் பாலாறு செவிலிமேடு சந்திப்பு, கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லலாம்.

* கூட்டேரிப்பட்டில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் வெள்ளிமேடுபேட்டை, வந்தவாசி, காஞ்சிபுரம் பாலாறு செவிலிமேடு சந்திப்பு, கீழம்பி புறவழிச்சாலை வழியாக சென்னை செல்லலாம்.

* திண்டிவனத்தில் இருந்து சென்னை செல்லும் கனரக வாகனங்கள் மரக்காணம் வழியாக சென்று, கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்லலாம்.


சென்னை வாகனங்கள்





* சென்னையிலிருந்து திண்டிவனம் செல்லும் வாகனங்கள் வண்டலுார், கேளம்பாக்கம், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று, மரக்காணம் வழியாக திண்டிவனம் சாலையை அடையலாம்.

* வண்டலுார், படப்பை, ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம், வந்தவாசி, தெள்ளார், வெள்ளிமேடுபேட்டை, தீவனுார் வழியாக கூட்டேரிப்பட்டு சென்று, ஜி.எஸ்.டி., சாலையை அடையலாம்.


* கூடுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கபெருமாள் கோவிலில் இருந்து விழுப்புரம் செல்லும் வாகனங்கள், செங்கல்பட்டு - ராட்டிணங்கிணறு வழியாக திருக்கழுக்குன்றம், வெங்கப்பாக்கம் சந்திப்பு சாலை வழியாக கிழக்கு கடற்கரை சாலை, மரக்காணம், திண்டிவனம் வழியாக, ஜி.எஸ்.டி., சாலையை அடையலாம்.

* சிங்கபெருமாள் கோவிலிலிருந்து செல்லும் வாகனங்கள் ஒரகடம், வாலாஜாபாத், காஞ்சிபுரம், வந்தவாசி, தெள்ளார், வெள்ளிமேடுபேட்டை, தீவனுார், கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாக, ஜி.எஸ்.டி., சாலையை அடையலாம்.


அரசு பேருந்து, கனரக வாகனங்கள்





* விழுப்புரத்திலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்துகள், இலகு ரக வாகனங்கள், காலை 11: 00 மணி முதல் இரவு 7:00 மணி வரை திண்டிவனம், புதுச்சேரி சந்திப்பு சாலை வழியாக மரக்காணம் சென்று, கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் வழியாக சென்னை செல்லலாம்.


* திண்டிவனம் கல்லுாரி சாலை வழியாக வெள்ளிமேடுபேட்டை, தெள்ளார், வந்தவாசி, காஞ்சிபுரம், வாலாஜாபாத், வண்டலுார் வழியாக சென்னை செல்லலாம்.

* திண்டிவனம் கல்லுாரி சாலை வழியாக வெள்ளிமேடுபேட்டை, தெள்ளார், வந்தவாசி, காஞ்சிபுரம் செவிலிமேடு பாலாறு சந்திப்பு, கீழம்பி புறவழிச்சாலை, ஸ்ரீபெரும்புதுார் வழியாக சென்னைக்கு செல்லலாம்.

Advertisement