ஆமதாபாத், நொய்டாவில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்

1

புதுடில்லி: ஆமதாபாத், நொய்டாவில் உள்ள பல பள்ளிகளுக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். பின்னர் நடத்தப்பட்ட சோதனையில் மிரட்டல் புரளி என தெரியவந்தது.



ஆமதாபாத், நொய்டாவில் உள்ள பள்ளிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளன. பள்ளிகளுக்கு விரைந்த வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதனால் அப்பகுதிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.


சோதனையில் சந்தேகப்படும் வகையில் எந்த பொருட்களும் சிக்கவில்லை. மிரட்டல் விடுத்த மர்மநபர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. மின்னஞ்சல் ஐடி அடிப்படையில், விசாரணை நடக்கிறது. விரைவில் மிரட்டல் விடுக்கப்பட்டதற்கான நோக்கத்தை கண்டறிவோம் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement