தமிழகத்திற்கு ரூ.3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
சென்னை: தமிழகத்திற்கு ரூ.3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்? என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
அவரது அறிக்கை: தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழகம் பக்கம் அடிக்கடி பிரதமர் மோடி வருகிறார். தமிழகத்திற்குத் தரவேண்டிய ரூ.3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்? தொகுதி மறுசீரமைப்பு போது தமிழகத்தின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பாஜவின் முகவர்போல் செயல்படும் கவர்னரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? 100 நாள் வேலைத்திட்டம் தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் ஜி ராம் ஜி திட்டம் கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்? பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக மத்திய பாஜ அரசு இழைத்து வரும் மதுரை எய்ம்ஸ் எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழக மக்களின் ஒருமனதான கோரிக்கையான நீட் விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பாஜ கூட்டணிக்குத் தமிழகம் எப்போதுமே தோல்வியைத்தான் தரும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (90)
ராஜ் - ,
24 ஜன,2026 - 16:07 Report Abuse
முதலீடு பண்ண மன்னிக்கவும் முதலீடு ஈர்க்க போகாத நாடு அப்பரிக்காவில் உள்ள உகண்டா. அதனால் அங்க போகனும் சீக்கிரம் காசு குடுங்க 0
0
Reply
ராஜ் - ,
24 ஜன,2026 - 16:02 Report Abuse
ஏன் கொள்ளை அடித்தது பத்த வில்லையா இன்னும் வேணுமா 0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
24 ஜன,2026 - 15:30 Report Abuse
அதெல்லாம் வராது, திமுக ஆட்சி தொலைந்து போனபிறகு தருவோம். ஏற்கனவே சுருட்டி முழுங்கிய பணத்தை புடுங்கி எடுத்து விட்டு தரலாம். 0
0
Reply
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
24 ஜன,2026 - 15:27 Report Abuse
நீ போன பிறகு வரும் 0
0
Reply
Chess Player - ,இந்தியா
24 ஜன,2026 - 06:54 Report Abuse
அரசியல்வாதிககு வெக்கம் இருக்காது என்று தெரியும் ஆனால் இந்த கருணாநிதி ஸ்டாலினுக்கு துளிகூட இல்லையே?
இதை நினைத்தால் , இதுக்கு வோட்டை போட்ட நமக்கு தான் வெக்கம் இருக்கணும் போல 0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
23 ஜன,2026 - 21:59 Report Abuse
பொங்கல் பரிசு மூவாயிரம் என்று அவுத்து விட்டீர்களே. அதிலிருந்து எடுத்துக்கொள்ள வேண்டியது தான். அல்லது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் என்று பத்தாயிரம் கோடி ரூபாயை வைத்து ஓட்டுவங்கி அரசியல் செய்தீர்களே. அதிலிருந்து எடுத்து கொள்ளவேண்டியது தானே. பணம் கொடுக்க மட்டுமே மத்திய அரசு வேண்டுமா? நயாபைசா கிடையாது. ஆட்டைய போடாமல் ஓடிபோயுடு. 0
0
vivek - Benaras,இந்தியா
28 ஜன,2026 - 08:47Report Abuse
பீகாரில் ஒவ்வொரு பெண்ணுக்கும் ரூ.10,000 பணம் கொடுத்தார்களே ஒரு விசித்திரம் என்ன தெரியுமா? அந்த பணத்தை கொடுத்ததாக காட்டிய கணக்கில் எஸ்.ஐ.ஆர். குறுக்கே வரவில்லை. நீங்கள் இருப்பதாக புலம்பிய ரோங்கியா, பங்களாதேஷ் கள்ளக்குடியேறிகளுக்கும் சேர்த்து கொடுத்ததாக்கணக்கெழுதி ஆட்டையை போட்டார்கள் என்று அக்கவுன்டன்ட் ஜெனரல் அறிக்கை தரப்போவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 0
0
Reply
Ganesun Iyer - ,இந்தியா
23 ஜன,2026 - 19:37 Report Abuse
கோபாலபுர கொத்தடிமை ஆட்சி முடிந்தவுடன் கிடைக்கும்... 0
0
Reply
G Mahalingam - Delhi,இந்தியா
23 ஜன,2026 - 16:46 Report Abuse
திமுக ஒழிந்தால் 10 மடங்கு கூடுதலாக தமிழ் நாட்டுக்கு நிதி வரும். 0
0
Reply
தமிழ்வேள் - திருவள்ளூர்-தொண்டைமண்டலம்-பாரதப் பேரரசு,இந்தியா
23 ஜன,2026 - 16:27 Report Abuse
நீயும், உன் வம்சமும் மண்டையைப் போட்டபின்பு வரும்..போய்யா அந்தண்டை...பிரும்மஹத்தி.. 0
0
Reply
samvijayv - Chennai,இந்தியா
23 ஜன,2026 - 15:54 Report Abuse
உன்னுடைய திமுகவின் ஆட்சி முடிந்தால் அனைத்தும் வரும் தமிழ்நாட்டிற்கு., அவ்வளவு சபா கேடு. 0
0
Reply
மேலும் 79 கருத்துக்கள்...
மேலும்
-
சென்னை :புகார்பெட்டி;போரூர் சாலையில் குப்பை குவியல்
-
சிவகாசி மாணவி தற்கொலை வழக்கில் கல்லுாரி முதல்வர், ஊழியர் கைது
-
சென்னை :புகார்பெட்டி; கல்குவாரி குட்டையில் குப்பைகள் கொட்டி மாசு
-
குடியிருப்பு பகுதியில் ராஜநாகம் -மீட்டு விடுவித்த வனத்துறையினர்
-
சென்னை: புகார்பெட்டி; சிக்னல் நேரத்தில் குளறுபடி விபத்தில் சிக்கும் வாகனங்கள்
-
முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்; சிவகாசி முன்னாள் ராணுவ வீரர் கைது
Advertisement
Advertisement