பொங்கல் தொகுப்பை விரைவாக வாங்குங்க! வாங்காதவர்களுக்கு அழைப்பு

பொள்ளாச்சி: ''பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காத ரேஷன் கார்டுதாரர்கள், விரைவாக வந்து வாங்கி கொள்ளலாம்,'' என, மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில், 10.77 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, 3,000 ரூபாய் வழங்கி உள்ளது. 43 ஆயிரத்து, 409 ரேஷன் கார்டுதாரர்கள் வாங்கவில்லை. வாங்காதவர்களுக்கு கடந்த, 19ம் தேதி முதல் வழங்கப்படுகிறது.

ரேஷன்கடை ஊழியர்கள், வாங்காத கார்டுதாரர்களை மொபைல் போனில் அழைத்து, தகவல் தெரிவிக்கின்றனர். சில கார்டுதாரர்களின் மொபைல்போன் எண்கள் பயன்பாட்டில் இல்லை என்பதால், தகவல் தெரிவிக்க முடியவில்லை என்கின்றனர்.

மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் கூறுகையில், ''பொங்கல் தொகுப்பு வாங்காமல் விடுபட்டவர்களுக்கு வழங்கி வருகிறோம்.

இரண்டு நாட்களில் 2,380 ரேஷன்கார்டுதாரர்கள் பெற்றுள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவாக வந்து வாங்கி கொள்ளலாம். தாயுமானவர் திட்ட பயனாளர்களும் வாங்கி கொள்ள லாம்,'' என்றார்.

Advertisement