தமிழகத்தை போலவே கர்நாடகா சட்டசபையிலும்... உரையை வாசிக்காமல் வெளியேறினார் கவர்னர் கெலாட்
பெங்களூரு: கர்நாடக சட்டசபை இன்று (ஜனவரி 22) கூடியதும் கவர்னர் தாவர்சந்த் கெலாட், அரசின் உரையில் தவறான தகவல்கள் உள்ளதாக உரையை வாசிக்காமல் புறக்கணித்து வெளியேறினார்.
ஒவ்வொரு ஆண்டும் சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் துவங்கும் போது, கவர்னர் உரை நிகழ்த்துவது வழக்கம். அந்த உரையில், மாநில அரசு செயல்படுத்திய திட்டங்கள், அதனால் மக்களுக்கு கிடைத்துள்ள பயன்கள், எதிர்கால திட்டங்கள் குறித்து விவரிப்பது வழக்கம். கவர்னரின் உரையை தயாரிப்பது, மாநில அரசு என்பதால் உரை முழுதும், அரசை பற்றிய புகழ்ச்சியாகவே இருக்கும். அத்துடன், மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை கவர்னர் வாசிப்பது, பல ஆண்டுகளாக நடந்து வரும் சம்பிரதாயம்.
அதேநேரத்தில், மாநில அரசின் உரையை கவர்னர் அப்படியே வாசிக்க வேண்டும் என்ற விதிமுறை எதுவும் இல்லை. உரையில் ஏதாவது ஒரு விஷயத்தில் சந்தேகம் அல்லது குழப்பம் இருந்தால், அதை நீக்கும்படி அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் கவர்னருக்கு உள்ளது. உரையை அப்படியே வாசிக்கும்படி அவருக்கு அழுத்தம் தர முடியாது. இந்நிலையில் இன்று கர்நாடகா சட்டசபை கூடியது.
அவை கூடியதும் கவர்னர் தாவர்சந்த் கெலாட், அரசின் உரையில் தவறான தகவல்கள் உள்ளதாக உரையை வாசிக்காமால் புறக்கணித்து வெளியேறினார். அவை உரையில் 3 வாக்கியங்களை மட்டுமே படித்தார். அவர் உரையை படிக்காமல் வெளியேறியதால் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் கர்நாடகா சட்டசபையில் கடும் கூச்சல், குழப்பத்துடன் பரபரப்பான சூழல் நிலவியது. சமீபத்திலும் தமிழக சட்டசபையில் கவர்னர் ரவியும், கேரளா சட்டசபையில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரும் அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சித்தராமையா காட்டம்
கவர்னர் உரையை படிக்காமல் வெளியேறியது குறித்து சட்டசபையில் முதல்வர் சித்தராமையா கூறியதாவது: அரசியலமைப்பு சட்டத்தின் 176,163 ஆகிய பிரிவுகளை கவர்னர் மீறியுள்ளார். கர்நாடகா கவர்னரின் செயல் அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது. கவர்னர் உரையை படிக்காமல் சென்றது குறித்து சுப்ரீம்கோர்ட்டிற்கு செல்வது தொடர்பாக பரிசீலனை செய்வோம். கர்நாடகா கவர்னரின் போக்கை கண்டித்து போராட்டங்கள் நடத்த உள்ளோம். இவ்வாறு சித்தராமையா கூறினார்.
ஆட்டுக்கு தாடியும் மாநிலத்துக்கு ஆளுநரும் அவசியமில்லை என பேரறிஞர் அண்ணாதுரை சொன்னது தான் சரி. தனக்கு சாதகமாக தீர்ப்புகளை கொடுக்க வைத்து தன கைப்பாவைகளாக ஆளுநர்களை ஆட சொல்லும் அரசின் கீழ்த்தரமான போக்கு கண்டிக்கத்தக்கதுமேலும்
-
இன்போசிஸ் நிறுவனர் பெயரில் மோசடி: எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்ட சுதா மூர்த்தி
-
தென்கொரிய பெண்ணுக்கு பெங்களூரு விமான நிலையத்தில் பாலியல் தொந்தரவு; ஊழியர் கைது
-
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும்; இபிஎஸ்-ஐ சந்தித்த பிறகு பியுஷ் கோயல் திட்டவட்டம்
-
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,720 சரிவு
-
அதிபர் டிரம்பின் அமைதி வாரியத்தில் சேர 8 இஸ்லாமிய நாடுகள் ஒப்புதல்
-
அது எங்களுடைய வேலையல்ல... கிரீன்லாந்து விவகாரம் குறித்து புடின் கருத்து