தொடரை இழந்தது வெ.இண்டீஸ் * ஆப்கன் வீரர் முஜீப் 'ஹாட்ரிக்'
துபாய்: இரண்டாவது 'டி-20' போட்டியில் 39 ரன்னில் தோற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, 0-2 என தொடரை இழந்தது.
துபாயில் வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான் அணிகள் 2வது 'டி-20' போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற வெஸ்ட் இண்டீஸ் பீல்டிங் செய்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு இப்ராஹிம் ஜத்ரன் (22), ரஹ்மானுல்லா குர்பாஸ் (1) ஜோடி துவக்கம் கொடுத்தது. செடிகுல்லா (53), டார்விஸ் ரசூலி (68) அரைசதம் அடித்தனர். 20 ஓவரில் ஆப்கானிஸ்தான் அணி 189/4 ரன் குவித்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதானசே, 8 ரன் எடுத்தார். 8வது ஓவரை முஜீப் அர் ரஹ்மான் வீசினார். 5, 6 வது பந்தில் எவின் லீவிஸ் (13), சார்லசை (0) வெளியேற்றினார். அடுத்து போட்டியின் 16வது ஓவரை வீசிய முஜீப், முதல் பந்தில் அரைசதம் அடித்த பிரண்டன் கிங்கை (50) அவுட்டாக்கினார். தொடர்ந்து 3 பந்தில் 3 விக்கெட் சாய்த்து, 'ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்தினார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 18.5 ஓவரில் 150 ரன்னில் ஆல் அவுட்டாகி தோற்றது. முஜீப், அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.
மூன்றாவது வீரர்
சர்வதேச 'டி-20'ல் 'ஹாட்ரிக்' சாதனை நிகழ்த்திய 3வது ஆப்கானிஸ்தான் பவுலர் ஆனார் முஜீப். முன்னதாக ரஷித் கான் (2019, எதிர்-அயர்லாந்து), கரிம் ஜனத் (2023, வங்கதேசம்) இதுபோல அசத்தியுள்ளனர்.
மேலும்
-
'ஹள்ளி' என்ற ஊர்களின் பெயர் மாற்றப்படும்: அமைச்சர் உறுதி
-
பன்னீர்செல்வம் 'ஆப்சென்ட்'
-
அரசு பஸ்களில் 'தமிழ்நாடு' இடம் பெறாது: அமைச்சர் சிவசங்கர்
-
22 லட்சம் பேருக்கு இலவச பட்டா
-
தமிழக உள்ளாட்சி அமைப்புகள் இணைப்பு மக்கள் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு: நேரு
-
மருத்துவ பணியாளர்கள் இரண்டாம் நாளாக போராட்டம்