22 லட்சம் பேருக்கு இலவச பட்டா

சட்டசபையில் நடந்த விவாதம்:

தி.மு.க., - நல்லதம்பி: திருப்பத்துார் ஜவ்வாது மலையில், பழங்குடியினர் அதிகளவில் வசிக்கின்றனர். இங்குள்ள நிலங்கள் அளவிடப்படாமல் உள்ளன. எனவே, நிலங்களை அளவீடு செய்து இலவச பட்டாக்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

-அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன்: தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு, 22 லட்சம் பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பட்டா கொடுக்காமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை தேடி பிடிப்பதில் சிரமம் இருக்கிறது.

முன்பு, அரசு சார்பில் நிலத்தை வாங்கி இலவசமாக மக்களுக்கு வழங்கப்பட்டது. தற்போது விலைவாசி கூடியுள்ளது. நிலத்தை வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோர்ட்டுக்கு செல்கின்றனர். எனவே, அரசு புறம்போக்கு நிலம் இருந்தால், பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement