அரசு பஸ்களில் 'தமிழ்நாடு' இடம் பெறாது: அமைச்சர் சிவசங்கர்

சென்னை: ''அரசு பஸ்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என எழுதப்படாததற்கு, நடைமுறை யாதார்த்தம்தான் காரணம்,'' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:

வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி : அரசு பஸ்களில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என எழுதாமல், வெறுமனே, அரசு போக்குவரத்துக் கழகம் என எழுதியுள்ளனர். இதை மாற்ற வேண்டும்.

அமைச்சர் சிவசங்கர்: போக்குவரத்து கோட்டங்களின் பெயர், கீழே வந்து விடக்கூடாது என்பதற்காக, நடைமுறை யதார்த்தப்படி அப்படி எழுதப்பட்டது. நாம் தமிழகத்தில் தான் இருக்கிறோம். இது தமிழக அரசுதான். இன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்று எழுதினால், தமிழ்நாடு அரசு பள்ளி என எழுதச் சொல்வர்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Advertisement