ஆதிஷ், பிரதோஷ் அரைசதம் * தமிழக அணி நிதான ஆட்டம்
புவனேஸ்வர்: இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ரஞ்சி கோப்பை 91வது சீசன் நடக்கிறது. 38 அணிகள் பங்கேற்கின்றன. 'ஏ' பிரிவில் இடம் பெற்ற தமிழக அணி 5 போட்டியில் 5 புள்ளி பெற்று (2 டிரா, 3 தோல்வி), பட்டியலில் 7வது இடம் பிடித்து காலிறுதி வாய்ப்பை இழந்தது. நேற்று தனது 6வது போட்டியில் தமிழக அணி, ஒடிசாவை சந்தித்தது. புவனேஸ்வரில் (ஒடிசா) நடக்கும் இப்போட்டியில் 'டாஸ்' வென்ற ஒடிசா பீல்டிங் தேர்வு செய்தது.
நான்கு அரைசதம்
தமிழக அணிக்கு ஆதிஷ் (50), ஜெகதீசன் (7) ஜோடி துவக்கம் தந்தது. பிரதோஷ் (78), ஆன்ரே சித்தார்த் (56) என இருவரும் அரைசதம் அடித்தனர். முதல் நாள் முடிவில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 281/7 ரன் எடுத்திருந்தது. கேப்டன் சாய் கிஷோர் (12), நிதிஷ் ராஜகோபால் (54) அவுட்டாகாமல் இருந்தனர்.
சர்பராஸ் அபாரம்
ஐதராபாத்தில் நடக்கும் போட்டியில் ('டி') மும்பை, ஐதராபாத் மோதுகின்றன. முதலில் களமிறங்கிய மும்பை அணியின் கேப்டன் சித்தேஷ் (104) சதம் அடித்தார். சர்பராஸ் கான் தன் பங்கிற்கு சதம் விளாசினார். முதல் நாள் முடிவில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 332/4 ரன் எடுத்திருந்தது. சர்பராஸ் (142) அவுட்டாகாமல் இருந்தார்.
சுப்மன் கில் 'டக்'
ராஜ்கோட்டில் நடக்கும் போட்டியில் பஞ்சாப், சவுராஷ்டிரா மோதுகின்றன. சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 172 ரன்னில் ஆல் அவுட்டானது. ஹர்பிரீத் பிரார் 6 விக்கெட் சாய்த்தார்.
பஞ்சாப் அணி கேப்டன் சுப்மன் கில், 2வது பந்தில் 'டக்' அவுட்டாக, முதல் இன்னிங்சில் 139 ரன்னில் சுருண்டது. முதல் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் சவுராஷ்டிரா அணி 24/3 ரன் எடுத்து, 57 ரன் முன்னிலை பெற்றிருந்தது.
மேலும்
-
'ஹள்ளி' என்ற ஊர்களின் பெயர் மாற்றப்படும்: அமைச்சர் உறுதி
-
பன்னீர்செல்வம் 'ஆப்சென்ட்'
-
அரசு பஸ்களில் 'தமிழ்நாடு' இடம் பெறாது: அமைச்சர் சிவசங்கர்
-
22 லட்சம் பேருக்கு இலவச பட்டா
-
தமிழக உள்ளாட்சி அமைப்புகள் இணைப்பு மக்கள் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு: நேரு
-
மருத்துவ பணியாளர்கள் இரண்டாம் நாளாக போராட்டம்