இலங்கை அணி முதல் வெற்றி * வீழ்ந்தது இங்கிலாந்து
கொழும்பு: இலங்கை சென்ற இங்கிலாந்து அணி மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று கொழும்புவில் நடந்தது. 'டாஸ்' வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இலங்கை அணிக்கு நிசங்கா (21), கமில் மிஷ்ரா (27) ஜோடி துவக்கம் கொடுத்தது. தனஞ்ஜெயா 10, கேப்டன் அசலங்கா 17 ரன் எடுத்து அவுட்டாகினர். லியனாகே 46 ரன் எடுத்து உதவினார். குசல் மெண்டிஸ் அரைசதம் கடந்தார். இலங்கை அணி 50 ஓவரில் 271/6 ரன் எடுத்தது. குசல் மெண்டிஸ் (93), வெல்லாலகே (25) அவுட்டாகாமல் இருந்தனர். இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், அதிகபட்சம் 3 விக்கெட் சாய்த்தார்.
இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராலே (6) ஏமாற்ற, டக்கெட் 62, ஜோ ரூட் 61 ரன் எடுத்து கைகொடுத்தனர். 'மிடில் ஆர்டரில்' பெத்தெல் (15), கேப்டன் ஹாரி புரூக் (6) நிலைக்கவில்லை. சாம் கர்ரான் (5), ரேஹன் (27), பட்லர் (19) விரைவில் திரும்பினர். மற்றவர்கள் ஏமாற்ற இங்கிலாந்து அணி 49.2 ஓவரில் 252 ரன்னில் ஆல் அவுட்டாகி, 19 ரன்னில் தோல்வியடைந்தது.
மேலும்
-
'ஹள்ளி' என்ற ஊர்களின் பெயர் மாற்றப்படும்: அமைச்சர் உறுதி
-
பன்னீர்செல்வம் 'ஆப்சென்ட்'
-
அரசு பஸ்களில் 'தமிழ்நாடு' இடம் பெறாது: அமைச்சர் சிவசங்கர்
-
22 லட்சம் பேருக்கு இலவச பட்டா
-
தமிழக உள்ளாட்சி அமைப்புகள் இணைப்பு மக்கள் எதிர்ப்பால் நிறுத்திவைப்பு: நேரு
-
மருத்துவ பணியாளர்கள் இரண்டாம் நாளாக போராட்டம்