900 இந்தியர்கள் விடுதலை: பட்டியல் தந்தது யு.ஏ.இ.,

1

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு, 900-க்கும் மேற்பட்ட இந்திய கைதிகளை விடுதலை செய்யும் பட்டியலை, அபுதாபியில் உள்ள நம் துாதரகத்திடம் ஒப்படைத்து உ ள்ளது.

மேற்காசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சின், 54வது தேசிய தினம் கடந்த டிசம்பர் 2ம் தேதி கொண்டாடப்பட்டது.

அப்போது அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், நாடு முழுதும் உள்ள சிறைகளில் இருந்து பல கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டார்.

இதன் தொடர்ச்சியாக, 900க்கும் மேற்பட்ட இந்திய கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனர். இதற்கான பட்டியல், அபுதாபியில் உள்ள நம் துாதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

இது, இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான முக்கியமான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

யு.ஏ.இ., அதிபர் நஹ்யான், கடந்த வாரம், மூன்று மணி நேர பயணமாக இந்தியா வந்திருந்தார்.

Advertisement