அமைச்சர் துறையில் ஊழல்: வழக்கு தொடர ஈ.டி., முடிவு?

1

சென்னை: தி.மு.க., அமைச்சர் நேரு வின் நகராட்சி நிர்வாகம் மற் றும் குடிநீர் வழங்கல் துறையில் நடந்த முறைகேடு தொடர்பாக சென்னை அம லாக்கத்துறை அலுவலகத் தில் நேற்று அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இது தொடர்பாக, அம லாக்கத் துறை வட்டாரங்கள் கூறியதாவது:

அமைச்சர் நேரு துறையில் நடந்த ஊழல் குறித்து ஆதாரங்களுடன், காவல் துறை தலைமைக்கு கடிதம் எழுதிய போதிலும், வழக்குப்பதிவு செய்யாமல் உள்ளனர். அதனால், பொறுப்பு டி.ஜி.பி., மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை இயக்குநர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement