கண்ணடி மாரியம்மன் கோவிலில் எருதாட்டம்; 25 காளை பங்கேற்பு

ஓமலுார்: கண்ணடி மாரியம்மன் கோவில் எருதாட்டத்தில், 25 காளைகள் பங்கேற்று பார்வையாளர்களை மிரளச் செய்தது.


ஓமலுார், முத்துநாயக்கன்பட்டி அருகே உள்ள கரிசல்பட்டியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நேற்று மதியம் கண்ணடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் எருதாட்டம் நடந்தது. முதலில் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில், கோவில் காளை சுற்றி கொண்டு வரப்பட்டது. பின்னர் ஓமலுார், தாரமங்கலம், முத்துநா-யக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட, 25 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக கோவிலை சுற்றி எருதாட்டம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்-கானோர், கோவிலை சுற்றி அமைக்கப்பட்ட இரும்பு வேலிக்கு பின்புறம் நின்றும், பலர் கட்டடங்களில் நின்றும் பார்வையிட்-டனர். ஒவ்வொரு காளையும் சீறி பாய்ந்து விளையாட்டு காட்டி-யதை பொதுமக்கள் ரசித்தனர். ஓமலுார் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் காளை முட்டியதில், இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Advertisement