ரயிலில் பெண்ணிடம் சில்மிஷம் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் கைது

சேலம்: கேரளாவில் இருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்த ஐ.டி., நிறுவன பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட, ஓய்வு வங்கி ஊழியர் கைது செய்யப்பட்டார்.


கேரள மாநிலத்தை சேர்ந்த, 25 வயது பெண், சென்னை ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் சொந்த ஊரில் இருந்து, திருவனந்தபுரம்-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் ஏ.சி., பெட்டியில் சென்னைக்கு சென்றார். சேலம் ஜங்ஷன் அருகே வந்தபோது, எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவர் அவ-ரிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், சேலம் ரயில்வே போலீசில் புகாரளித்தார். விசாரித்த போலீசார், சென்னையை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியர் அருளானந்தம், 63, என்ப-வரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement