மேட்டூர் அணை நீர்வரத்து கடும் சரிவு
மேட்டூர்: மேட்டூர் அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 11 கனஅடியாக கடுமையாக சரிந்தது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம், 120 அடி. கடந்த மாதம், 20ல் மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு, 1,837 கனஅடியாக இருந்தது. பின்பு தமிழக-கர்நாடகா எல்லையிலுள்ள காவிரி நீர்பி-டிப்பு பகுதியில் நீடித்த கடும் வறட்சியால், நீர்வரத்து கடுமையாக சரிய துவங்கியது.
கடந்த மாதம், 24ல், 938 கனஅடி, கடந்த, 1ல், 384 கனஅடி, 2ல், 164 கனஅடி, 12ல், 58 கனஅடி, 13ல், 44 கனஅடி, 15ல், 26 கனஅடி, 16ல், 17 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று வினாடிக்கு, 11 கனஅடியாக கடுமையாக சரிந்தது.அணையில் இருந்து பாசனத்துக்கு, 7,000 கனஅடி நீர் திறக்கப்-பட்டது. நீர்வரத்து கடும் சரிவால் நேற்று முன்தினம், 97.17 அடி-யாக இருந்த அணை நீர்மட்டம் நேற்று, 95.67 அடியாக சரிந்தது. கடந்த, 2017ல் அணை நீர்வரத்து வினாடிக்கு, 10 கனஅடிக்கும் கீழே சரிந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
5 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு தரணும்: அமெரிக்க வங்கி மீது அதிபர் டிரம்ப் வழக்கு
-
சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமினை ரத்து செய்ய மறுப்பு: கூடுதல் நிபந்தனைகளை விதித்தது ஐகோர்ட்
-
சென்னை வந்தார் பிரதமர் மோடி; தேஜ கூட்டணி தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார்!
-
இபிஎஸ் தலைமையில் சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம்; சொல்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
-
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு; விமான சேவைகள் பாதிப்பு... தேசிய நெடுஞ்சாலை மூடல்
-
தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை