தி.மு.க., கூட்டணிக்கு வீர முத்தரையர் முன்னேற்ற சங்கம் ஆதரவு

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், தமிழர் தேசிய கட்சியும், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கமும் தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

அதன் தலைவர் செல்வக்குமார், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

வரும் 25ம் தேதி, 'அரசியல் அதிகாரம் மீட்பு மாநாடு' நடத்த உள்ளோம். அதற்கான அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதியிடம் வழங்கி, அழைப்பு விடுத்துள்ளோம்.

சட்டசபை தேர்தலில், அவர்களுக்கு முழு ஆதரவு அளித்துள்ளோம். கடந்த லோக்சபா தேர்தலில், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தேர்தல் பணி செய்தோம்.

ஆனால், எங்களுக்கு கொடுத்த குறைந்தபட்ச வாக்குறுதிகளை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை; அலட்சியப் படுத்தினர்.

எனவே சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இணைந்துள்ளோம். தேர்தலில் போட்டியிடவும் வாய்ப்பு கேட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement