சபாநாயகர் சொல்ல கூடாது: பழனிசாமி

1

சென்னை: சட்டசபையில் கவர்னர் உரை மீதான விவாதத்தை துவக்கி வைத்து பேசிய அ.தி.மு.க., - எம்.எம்.ஏ., தங்கமணி, தமிழகத்தின் கடன் குறித்து சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு, சில புள்ளிவிவரங்களுடன் சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்தார்.

அப்போது குறுக்கிட்ட பழனிசாமி, “அமைச்சர்களிடம் இருந்து பதில் பெறவே, எதிர்க்கட்சி எம்.எ ல்.ஏ.,க்கள் பேசுகின்றனர். எனவே, அமைச்சர்கள் சொல்ல வேண்டியதை சபாநாயகர் சொல்ல வேண்டாம்,” என்றார்.

அதற்குப் பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “நிதியமைச்சர் சபையில் இல்லாததால் பதில் சொல்ல வேண்டி வந்தது,” என்றார்.

Advertisement