பாத்திரக்கடை கிளை திறப்பு விழா
சிதம்பரம்: சிதம்பரத்தில், மீனாட்சி பாத்திரக்கடையின் இரண்டாவது கிளை திறப்பு விழா நேற்று நடந்தது.
சிதம்பரம், தெற்கு வீதியில், மீனாட்சி பாத்திரக்கடை என்ற நிறுவனம் கடந்த 50 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இரண்டாவது கிளையின் திறப்பு விழா நேற்று நடந்தது.
அம்மாபேட்டையில் அமைக்கப்பட்ட, மீனாட்சி பாத்திரக்கடையின், புதிய கிளையை உரிமையாளர்கள் சுப்பையா, தெய்வானை ஆகியோர் பங்கேற்று, ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில், சிதம்பரம், முத்துநாச்சியம்மை , நடராஜன், மீனாட்சி, முத்துக்குமார், ஜானகி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் ஹரி, யாசின், தீபக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதிய கிளை திறப்பு விழாவையொட்டி, ஒரு வாரத்திற்கு மட்டும், பாத்திரங்கள் மற்றும் பர்னிச்சர்கள், 10 சதவிகிதம் தள்ளுபடி விலையில், விற்பனை செய்யப்படும் என உரிமையாளர் சிதம்பரம் தெரிவித்தார்.
மேலும்
-
எங்களுக்கும் திருப்பி அடிக்க தெரியும்: தி.மு.க.,வுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி
-
நான்கரை ஆண்டு தி.மு.க., ஆட்சியில் 7,500 படுகொலைகள்: அன்புமணி ஆவேசம்
-
தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய முடியாது: சுப்பிரமணியன்
-
அய்யப்பன் கோவில் தங்க கவசத்தை வீட்டில் வைத்து பூஜை செய்த நடிகர்
-
இதே நாளில் அன்று
-
எந்த வகையில் நியாயம்?