டயர் வெடித்து கவிழ்ந்த லாரி நெமிலிச்சேரியில் விபத்து 

ஆவடி: நெமிலிச்சேரி அருகே டயர் வெடித்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

செங்குன்றத்தில் இருந்து ஸ்ரீபெரும்பதுாருக்கு, காலணிகள் ஏற்றிக்கொண்டு, 'ஈச்சர்' லாரி வண்டலுார் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில், நேற்று காலை சென்று கொண்டிருந்தது.

லாரியை, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த சல்மான் கான், 24, என்பவர் ஓட்டிச் சென்றார். நெமிலிச்சேரி அருகே வந்தபோது, லாரியின் பின்பக்க டயர் வெடித்ததில், அவரது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டாபிராம் போக்குவரத்து போலீசார், 'கிரேன்' உதவியுடன் லாரியை துாக்கி நிறுத்தினர்.

இந்த விபத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து, வண்டலுார் நோக்கி சென்ற வாகனங்கள் அனைத்தும் அணுகு சாலை வழியாக திருப்பிவிடப்பட்டன.

Advertisement