கஞ்சா பறிமுதல் இருவர் சிக்கினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே, கடந்த 25ம் தேதி திருவள்ளூர் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர்.

அவரது உடைமையை செய்தபோது கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், ஒடிஷா மாநிலத்தைச் சேர்ந்த ஜகத் பத்ரா, 22, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து, ஜகத் பத்ரா அளித்த தகவலின்படி, தலைமறைவாக இருந்த ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நரேஷ் குமார் என்ற ராஜ் ஷோத்ரி, 28, என்பவரை, மதுவிலக்கு போலீசார் நேற்று கைது செய்தனர்.

இருவரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

Advertisement