மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது முதல்கட்டத்தில் 33 கேள்விகள்; என்னென்ன தெரியுமா?

12


புதுடில்லி:மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மக்களிடம் கேட்க வேண்டிய 33 கேள்விகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஓர் சிறப்பு அலசல்!


அரசின் நலத்திட்ட உதவிகள், பொது மக்களுக்கு முறையாக சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில், 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை, நாடு முழுதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி நடக்கும். அந்த வகையில், நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி, 2027ல் இருகட்டங்களாக நடக்கும் என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

அதாவது 2027ம் ஆண்டு பிப்ரவரியில் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்க உள்ளது. இதற்காக வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் செப்டம்பர் வரை வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் நடக்க உள்ளது. 33 கேள்விகள் இந்த கணகெடுப்புப் பணியின்போது கேட்பதற்காக பட்டியலிடப்பட்டுள்ளன என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் விபரம் பின்வருமாறு:

1. கட்டட எண் (நகராட்சி அல்லது உள்ளூர் அதிகாரசபை அல்லது மக்கள் தொகை கணக்கெடுப்பு எண்).


2.வீட்டு எண் என்ன?

3. வீட்டின் தரையின் நிலைமை?

4. வீட்டின் சுவரின் நிலைமை?

5. வீட்டு கூரையின் நிலவரம்?


6. வீடு தற்போது பயன்பாட்டில் உள்ளதா?


7.. வீட்டில் வசிக்கும் மொத்த நபர்களின் எண்ணிக்கை என்ன?

8. குடும்ப தலைவரின் பெயர்.

9. குடும்ப தலைவரின் பாலினம்.

10. குடும்பத் தலைவர் பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடி/பிற இனத்தைச் சேர்ந்தவரா?

11. வீட்டில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை.

12. குடிநீரின் முக்கிய ஆதாரம்?

13. கழிப்பறை உள்ளதா?

14. கழிவு நீர் வெளியேற்றம் எங்கே?

15. சமையலறை மற்றும் எல்ஜிபி காஸ் இணைப்பு உள்ளதா?


16. சமையலுக்குப் பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள் என்ன?

17. ரேடியோ உள்ளதா?

18. தொலைக்காட்சி உள்ளதா?

19. மடிக்கணினி, கணினி உள்ளதா?


20. மொபைல் எண் என்ன? ஸ்மார்ட் போன் உள்ளதா?

21. சைக்கிள், பைக் உள்ளதா?

22. கார், ஜீப், வேன் உள்ளதா?

23. வீட்டில் உட்கொள்ளப்படும் முக்கிய தானியம் என்ன? உள்ளிட்ட மொத்த 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

Advertisement