அதிபர் டிரம்ப் VS கனடா பிரதமர் கார்னி; அமைதி வாரியத்தில் சேர விடுத்த அழைப்பு வாபஸ்
வாஷிங்டன்: கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அமைதி வாரியத்தில் சேர விடுத்த அழைப்பை வாபஸ் பெறுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள காசாவில் அமைதியை ஏற்படுத்துவதற்காக அமைதி வாரியம் என்ற புதிய அமைப்பு ஒன்றை தனது தலைமையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உருவாக்கி உள்ளார் . இதில் சேர்வதற்கு அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார் . ஆனால் , சீனா இந்த அமைப்பில் சேர்வதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது . பிரிட்டன் , பிரான்ஸ் ஆகிய நாடுகள் இந்த அமைப்பில் சேர்வதை நிறுத்திவைத்துள்ளன.
இந்த சூழலில் உலகளாவிய மோதல்களை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் டிரம்ப் உருவாக்கிய அமைப்பில் சேருவதற்கு பணம் செலுத்த போவதில்லை என பரபரப்பு தகவலை தெரிவித்து கனடா பிரதமர் மார்க் கார்னி உலகளாவிய கவனத்தை ஈர்த்தார். அதேபோல், டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் மார்க் கார்னி விமர்சனம் செய்து பேசியதால் அதிபர் டிரம்ப் உடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தலைமையிலான விதிகளை அடிப்படையாக கொண்ட உலகளாவிய ஒழுங்கில் பிளவு ஏற்பட்டிருக்கிறது.
கனடா அமெரிக்காவின் தயவால் வாழவில்லை என கனடா பிரதமர் தெரிவித்தார். இதன் எதிரொலியாக கனடா பிரதமர் மார்க் கார்னிக்கு அமைதி வாரியத்தில் சேர விடுத்த அழைப்பை வாபஸ் பெறுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கனடாவின் இணைவு தொடர்பான அழைப்பை அமைதி வாரியம் திரும்ப பெறுகிறது. இது இதுவரை கூடியிராத மிகவும் மதிப்புமிக்க தலைவர்கள் குழுவாக இருக்கும். இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
@block_P@
சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் செயலி, அமெரிக்காவில் தடை செய்யப்படுவதிலிருந்து மீட்டெடுக்க அந்நாட்டு முதலீட்டாளர்களுடன் புதிய ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளது. இது குறித்து அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: டிக்டாக் செயலியை காப்பாற்ற உதவியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது இப்போது உலகின் மிகப்பெரிய அமெரிக்க தேசபக்தர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் குழுவின் வசம் இருக்கும்,
மேலும் இது ஒரு முக்கியமான குரலாகவும் இருக்கும். எதிர்காலத்தில் டிக்டாக் செயலியை பயன்படுத்துபவர்களும், நேசிப்பவர்களும் என்னை நினைவில் வைத்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
இந்த ஒப்பந்தத்துக்கு உதவிய துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் மற்றும் எனது நிர்வாகத்தில் உள்ள அனைவருக்கும் நன்றி. எங்களுடன் இணைந்து பணியாற்றியதற்கும், இறுதியில் ஒப்பந்தத்தை அங்கீகரித்ததற்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அவர் வேறு வழியில் சென்றிருக்கலாம், ஆனால் அவ்வாறு செய்யவில்லை. இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.block_P
இங்க தமிழ்நாட்டுல நம்மளுக்கு ஒருத்தர் இருக்கிற மாதிரி அங்கே அவர்களுக்கு ஒருத்தர்
நடப்பு நூற்றாண்டின் மறக்க முடியாத கனவுலக சர்வாதிகாரி.
அமெரிக்க அதிபர் டிரம்ப், நமது 23 -ஆம் புலிகேசி வடிவேலுவைவிட மிகவும் கோமாளியாக உள்ளார். வடிவேலுவாவது படத்தில் கோமாளி. ஆனால் இந்த டிரம்ப் நிஜத்தில் கோமாளி.
தான்தோன்றி தனம் .ஐநா போன்ற உலக அமைப்புகள் இருக்கும் பொது முந்திரிக்கொட்டை முயற்சி. உலக அமைப்புகள் பலவீன படுகின்றன.
கேனப்பயலுக கூட்டத்திற்கு கிறுக்குப்பய நாட்டாமை.
உலக நாடுகள் இவருடைய அடாவடிக்கு பதில் சொல்லாமல் அமைதி காத்து மாபெரும் தவறு செய்கிறார்கள்.
சார், இது பெரும் புயலுக்கு முன் உள்ள அமைதி...
துக்ளக் ஆட்சி பற்றிக் கேள்வி பட்டிருக்கிறோம். நான் வாழ்நாளில் டிரம்ப் துக்ளக் ஆட்சி நடத்துகிறார்.
இவரோட பெரிய காமெடியா போய்டுச்சுப்பா. வராதவங்களை வெத்தலை பாக்கு வச்சு கூப்பிடறாரு. வந்தவர்களை கழட்டி விட்றாரு.