தங்கம் விலை தாறுமாறாக உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.3600 அதிகரிப்பு

3

சென்னை: சென்னையில் இன்று (ஜனவரி 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3,600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சர்வதேச முதலீட்டாளர்களும், பல நாடுகளும் பாதுகாப்பு கருதி, தங்கத்தில் அதிக முதலீடு செய்வதால், அதன் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வெள்ளி மீதும் முதலீடுகள் அதிகரித்துள்ளதால் அதன் விலை உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (ஜனவரி 21) காலை தங்கம் விலை கிராமுக்கு 350 ரூபாய் அதிகரித்து, 14,250 ரூபாய்க்கு விற்பனையானது.



சவரனுக்கு 2,800 ரூபாய் உயர்ந்து, 1.14 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமில்லை.அன்றைய தினம் மதியம் மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு 165 ரூபாய் உயர்ந்து, 14,415 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 1,320 ரூபாய் அதிகரித்து, 1,15,320 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து, 345 ரூபாய்க்கு விற்கப்பட்டது. கிலோவுக்கு 5,000 ரூபாய் அதிகரித்து, 3.45 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

நேற்றைய நிலவரம்





நேற்று (ஜனவரி 22) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 1,720 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு 215 ரூபாய் சரிந்து ஒரு கிராம் 14,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது.


வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 345 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கிலோவுக்கு 5 ஆயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ 3 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

இன்றைய நிலவரம்



இந்நிலையில் இன்று (ஜனவரி 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 3600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 450 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 14 ஆயிரத்து 650 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 20 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு 20 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 3 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த கால தங்கம் விலை அறிய இங்கே கிளிக் செய்யவும்

Advertisement