எவ்வளவு கதறினாலும் திமுக மீண்டும் அரியணை ஏறப்போவதில்லை; நயினார் நாகேந்திரன்
சென்னை: 'தமிழகத்தில் கொடுங்கோல் ஆட்சியை நடத்திவிட்டு, போட்டோஷூட்டுக்கு மட்டும் தலைகாட்டும் முதல்வர் ஸ்டாலினின் வெற்று திசைத்திருப்பு ஒப்பாரியைக் கண்டு மக்கள் மாறப்போவதில்லை,' என்று பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை; ஷாக்கைக் குறைங்க முதல்வர் ஸ்டாலின், சிங்கம் வருவதைக் கண்டு, சிறுநரிகள் பயத்தில் பதறுவதைப் போல, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றித் தலைவன் வருவதற்கு முன்னே வழக்கம் போல திமுக அரசின் வெற்றுப் புலம்பல் ஒலி தொடங்கி இருக்கிறது! தங்களது அத்தனைப் போலிக் குற்றச்சாட்டுகளுக்கும் இந்த ஒரு புகைப்படமே பதில்! அதைப் பார்த்த பின்பாவது புளித்தப்போன புரட்டுகளைப் பரப்புவதை நிறுத்துங்கள்!
நியாயமான கோரிக்கையை நிறைவேற்றக்கோரி தூய்மைப் பணியாளர்கள் போராடிய வேளையில், அவர்களைக் காணாது திரைப்படம் கண்டு களித்ததை யாராவது மறக்க முடியுமா? தினந்தினம் பெண்கள் காமக்கொடூரர்களின் கரங்களில் சிக்கித் தவிக்கும் வேளையில், "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என நாடகம் நடத்தி விளம்பரம் தேடியதை மறக்க முடியுமா? போதையின் பாதையில் இளைஞர்கள் சீரழியும் போது, போதைப் பொருள் புழக்கத்தைத் தடுப்பதைவிட்டு, மேடையில் மட்டும் பாடம் எடுத்த கோரத்தை மறக்க முடியுமா? கொடுத்த வாக்குறுதியைப் பறக்கவிட்டு பகுதிநேர ஆசிரியர் கண்ணனின் உயிரைப் பறித்த கொடூரத்தை தான் மறக்க முடியுமா?
@twitter@https://x.com/NainarBJP/status/2014598174649024721twitter
இப்படிப்பட்ட கொடுங்கோல் ஆட்சியை நடத்திவிட்டு, போட்டோஷூட்டுக்கு மட்டும் தலைகாட்டும் தங்களின் வெற்று திசைத்திருப்பு ஒப்பாரியைக் கண்டு மக்கள் மாறப்போவதில்லை! இன்னும் எவ்வளவு கதறினாலும் திமுக இனியொருமுறை அரியணை ஏறப்போவதில்லை!, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாராயம் விக்கிற நீங்க முதலில் கதறுவதை நிறுத்துங்கள்.
இதிகாச கால ராவணனன் துரியோசனன் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலின் போல் பெரிய தவறுகள் செய்யவில்லை. ராவணன் சீதையை கவர்ந்தான். கவுரவ தலைவன் திரௌபதியை மானபங்கப்படுத்தினான் இவர்களை தண்டிக்க ஆண்டவனுக்கு ஒரு நிமிடம் போதுமென்றாலும் பல ஆண்டுகள் எடுத்துக்கொண்டான். ஸ்டாலினை தண்டிக்க பகவான் 2026 ஆண்டு தேர்தலை தேர்ந்து எடுத்தாலும் ஆச்சரியம் இல்லை. பகவான் எண்ணம் இனியும் தாமதித்தால் தமிழகம் காணாமல் போய்விடும். தற்போது கைவசம் உள்ள ஆயுதங்கள் தாமரை இரட்டை இலை விசில்
தாமரை இலை நாயகன் திருமணமானதும் சீதையை அப்புறப்படுத்தி வாழாவெட்டியாகிட்டார், அப்புறம் சிவதாண்டவம் தான் தமிழகத்தில் தேர்தலின் பின்பு.மேலும்
-
இளைஞர்களிடம் ஆசை காட்டி பணம் பறித்த பரமக்குடி பெண் கைது
-
'நியோ மேக்ஸ்' சொத்துகள் ஏலம் விட ஐகோர்ட் உத்தரவு
-
'விசில்' சின்னத்திற்கு நல்ல வரவேற்பு; காங்., எம்.பி., கார்த்தி வாய்ஸ்
-
பாலியல் தொல்லை 20 ஆண்டு சிறை
-
அரசு தொகுப்பு வீடுகளில் விரிசல்; குடியேற பழங்குடிகள் அச்சம்
-
திறன் மேம்பாட்டு பயிற்சி மத்திய அரசு ஒப்பந்தம்