'நியோ மேக்ஸ்' சொத்துகள் ஏலம் விட ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட நியோ மேக்ஸ் உள்ளிட்ட சில நிதி நிறுவனங்கள், முதலீட்டிற்கு அதிக வட்டி தருவதாகவும், முதிர்வு தொகை பல மடங்கு திருப்பி தரப்படும் எனவும் ஆசை வார்த்தை கூறி, பல கோடி ரூபாய் வசூலித்து, மோசடி செய்தன. மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

நிறுவன நிர்வாகிகளில் சிலர் கைதாகி ஜாமினில் வந்தனர். அவர்களின் ஜாமினை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி, பல்வேறு மனுக்கள் தாக்கலாகின.

நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவு:

நியோ மேக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சொத்துகள் கையகப்படுத்தப் பட்டுள்ளன. இவற்றில், நிலம், ஹோட்டல், வணிக வளாகங்கள் அடங்கும்.

மொத்தம் 60,000 பேர் புகார் அளித்துள்ளனர். 6,000 கோடி ரூபாய் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. முதற்கட்டமாக கட்டடங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பொது ஏலம் விட வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.

Advertisement