'விசில்' சின்னத்திற்கு நல்ல வரவேற்பு; காங்., எம்.பி., கார்த்தி வாய்ஸ்

சிவகங்கை: த.வெ.க.,விற்கு ஒதுக்கிய விசில் சின்னத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், கவனமாக தேர்தல் பணி ஆற்றுமாறு கட்சியினருக்கு சிவகங்கை காங்., எம்.பி., கார்த்தி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்திய தேர்தல் கமிஷன் தமிழக வெற்றி கழகம் கட்சிக்கு 'விசில்' சின்னம் ஒதுக்கியுள்ளது. இதையடுத்து த.வெ.க.,வினர் மக்களுக்கு இனிப்பும், விசில் வழங்கியும் கொண்டாடினர்.

இந்நிலையில் சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த காங்., நிர்வாகிகளுக்கு காங்., எம்.பி., கார்த்தி மெசேஜ் அனுப்பியுள்ளார். அதில், வாக்காளர் பட்டியலில் அனைவரையும் விடுபடாமல் சேர்க்க நடவடிக்கை எடுத்துவிட்டீர்களா. மக்களோடு மக்களாக இருந்து, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்டு எனக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்புங்கள்.

இந்த தேர்தல் சற்று கடுமையாக இருக்கும். இதனால் ஜாக்கிரதையாக இருந்து வேலை பாருங்கள். காங்., பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

விஜய் கட்சிக்கு (த.வெ.க.,) விசில் சின்னம் அறிவித்துள்ளனர். என்னை பொறுத்தமட்டில் அது நல்ல சின்னம் தான். உங்கள் பகுதி மக்கள் எந்த கட்சி, கூட்டணிக்கு எந்தவிதமான வரவேற்பு தருகிறார்கள் என்பதை கவனித்து எனக்கு அனுப்புங்கள் என கூறியுள்ளார்.

Advertisement