இளைஞர்களிடம் ஆசை காட்டி பணம் பறித்த பரமக்குடி பெண் கைது
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் போலி முகவரி முகநுால் கணக்குகளை நம்பி ஏராளமானோர் சாட்டிங் செய்து பணத்தை இழந்து வருகின்றனர். எஸ்.பி., ஸ்டாலினிடம் சிலர் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த முகமது ஷாஜகான் மகள் நபிலா பேகம் 27, என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இவர் ஏராளமான இளம் பெண்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து அவர்களிடம் உல்லாசமாக இருக்கலாம் என்று கூறி லட்சக்கணக்கான பணம் பறித்தது விசாரணையில் தெரியவந்தது. போலீசார் பரமக்குடி சென்று நமிதா பேகத்தை கைது செய்தனர். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு தக்கலை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் சொத்து ரூ.68 லட்சம் கோடி
-
நாட்டின் வளர்ச்சிக்கு எம்பிக்கள் பாடுபடணும்: பார்லி வளாகத்தில் மோடி பேட்டி
-
ஒரு தளம் கொண்ட கட்டடத்திற்கு 'லிப்ட்' அமைக்க 75 ஆண்டு மரம் வெட்டி சாய்ப்பு
-
தங்கம் விலை தாறுமாறாக உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.9,520 உயர்ந்து புதிய உச்சம்
-
அஜித் பவார் உடலுக்கு இறுதிச்சடங்கு; அமித் ஷா நேரில் அஞ்சலி
-
கொலம்பியாவில் விமான விபத்து; எம்பி உட்பட 15 பேர் பலியான சோகம்!
Advertisement
Advertisement