இபிஎஸ் தலைமையில் சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம்; சொல்கிறார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

4

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இபிஎஸ் தலைமையில் மாபெரும் வெற்றி பெறுவோம் என்று மத்திய அமைச்சரும், தமிழப பாஜ மேலிட தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி;

தமிழகத்தைச் சேர்ந்த என் சகோதர சகோதரிகள் அனைவரும் பிரதமர் மோடியை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். பிரதமர் மோடி தலைமையில் உருவான வலுவான கூட்டணியின் உருவாக்கம் மற்றும் அதன் விரிவாக்கத்தால் இபிஎஸ் உள்ளிட்ட மற்ற தலைவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் இருக்கின்றனர்.

தமிழகத்தில் இபிஎஸ் தலைமையில் சட்டசபை தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம். முதல்வர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி தலைமையிலான இந்த ஊழல் நிறைந்த, திறமையற்ற திமுக ஆட்சியை வேரோடு அகற்றுவோம் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

இவ்வாறு பியூஷ் கோயல் பேட்டியளித்தார்.

Advertisement