பல்லாங்குழி ரோடு பள்ளங்கள் மூடல்

வடமதுரை: வடமதுரை ரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் இருந்த பள்ளங்கள் தினமலர் செய்தி எதிரொலியாக மண் கொட்டி மூடப்பட்டது.

வடமதுரை அரசு மேல்நிலைப் பள்ளிகள் அருகில் நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பு ரோட்டில் அமைக்கப்பட்டிருக்கும் வேகத்தடை பகுதியில் இருபுறமும் மண் மேடாக மாறி உள்ளதால் மழை நேரத்தில் மழை நீர் பெருமளவில் ரோட்டிலே தேங்குகிறது.

இதனால் இப்பகுதியில் ரோடு சிதைந்து பள்ளங்களாக மாறி மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். இப்பள்ளங்கள் குறித்து தினமலர் நாளிதழ் இன்பாக்ஸ் பகுதியில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை ரோடு என்ற போதிலும் பேரூராட்சி நிர்வாகத்தினரே கவனம் செலுத்தி பள்ளங்களில் மண் கொட்டி சீரமைத்து மக்களை சிரமத்தை போக்கினர்.

அடிக்கடி இதுபோன்ற நிலை ஏற்படுவதை தவிர்க்க நெடுஞ்சாலைத்துறையினர் மழை நீரை இருபுறமும் இருக்கும் வடிகாலில் சேர்ந்து வெளியேற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement