செங்கல் கட்டு வேலையில் உயர அடிப்படையில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!
வீட்டுக்கான கட்டுமான பணியில், கம்பிகளை உள்ளீடாக வைத்து கான்கிரீட் கொட்டி துாண்கள், பீம்கள், மேல் தளம் போன்ற பாகங்களின் உறுதியில் மக்கள் கூடுதல் கவனம் செலுத்துகின்றனர். கட்டடத்தின் ஸ்திர தன்மை பாதுகாப்பு என்ற அடிப்படையில் இந்த விஷயத்தில் எந்த தவறும் இல்லை.
அதே நேரத்தில் வீட்டுக்கான கட்டுமான பணிகளில் சுவர்கள் கட்டுமான விஷயத்திலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். உங்கள் வீட்டுக்கான கட்டுமான பணியில், பிரேம்டு ஸ்டிரக்ட்சர் முறையை பின்பற்றும் போது, துாண்கள், பீம்கள் உறுதியாக இருந்தால் போதும் என்று மக்கள் நினைக்கின்றனர்.
ஆனால், இந்த பாகங்களின் உறுதியில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள கூடாது தான் என்றாலும், அதே முக்கியத்துவம் சுவர்களுக்கும் கொடுக்க வேண்டும். துாண்கள், பீம்கள் தான் கட்டடத்தின் சுமையை தாங்கும் என்று கூறப்பட்டாலும், சுவர்களில் குறிப்பிட்ட அளவு சுமை இறங்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
புதிய வீட்டுக்கான பணிகளில் அஸ்திவாரம் அமைத்து தரை மட்டம் வரையிலான உயரம் என்னவாக இருக்க வேண்டும் என்று பார்த்து அதற்கான சுவர் எழுப்ப வேண்டும். இந்த உயரம் எவ்வளவு இருக்க வேண்டும் என்பதில், உரிமையாளர்கள் அப்பகுதியின் சூழல் அடிப்படையில் முடிவு எடுக்கலாம்.
இதில், சுவர் எழுப்பும் பணிகள் அடிப்படையில் மூன்று நிலைகளாக வகைபடுத்தப்படுகின்றன. இதன்படி, கட்டடத்தின் தரை மட்டத்தில் இருந்து, ஜன்னல் மட்டம் வரையிலான பகுதி, 3 அடி உயரம் வரை இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.இந்த பாகத்தில் சுவர் எழுப்பும் போது, அதில், ஜன்னல்கள், வீட்டின்வாசல் படி அமைப்புகள் நிறுத்தப்படும் இடங்கள், துாண்களுடன் இணையும் இடங்களை கவனமாக பார்க்க வேண்டும்.
இதில் ஜன்னல் பிரேம்களை வைக்கும் இடத்தில் சுமை பரவல் விஷயத்தில் துல்லியமாக கவனம் செலுத்தி செயல்பட வேண்டும்.
இதற்கு அடுத்தபடியாக, ஜன்னல் மட்டத்தில் இருந்து, லிண்டல் மட்டம் வரையிலான ஏழு அடி உயரத்துக்கு சுவர் கட்டும் வேலை, இரண்டாம் கட்டமாக வகைப்படுத்தப்படுகிறது. இதில், ஜன்னல்கள் அமையும் இடங்களில் உரிய இடைவெளிகள் விட்டு சுவர் எழுப்ப வேண்டும்.
இதில், சுவருக்கான செங்கல் கட்டு வேலையின் போதே, ஜன்னல் பிரேம்களை வைப்பதா அல்லது, சுவர் வேலை முடிந்தவுடன் பிரேம்களை வைப்பதா என்பதை முடிவு செய்யுங்கள். பொதுவாக, சுவர்கள் கட்டு வேலையை முடித்துவிட்டு ஜன்னல் பிரேம்களை வைப்பதற்கு தான் பலரும் விரும்புகின்றனர்.
இதற்கு அப்பால், லிண்டல் முதல் ரூப் ஸ்லாப் வரையிலான பாகம். இதுவும் மூன்று அடி வரை அமைந்து இருக்கும். இந்த பாகத்துக்கான செங்கல் கட்டு வேலையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
வீட்டுக்கான சுவர் எழுப்பும் பணிகள், ஜன்னல் வரை, லிண்டல் வரை, மேல் தளம் வரை என மூன்று பகுதிகளாக பிரிக்கப்படுகின்றன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும்
-
பகுதிநேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளுக்கு மறுவாழ்வளிக்கும் அப்போலோ மருத்துவமனையின் இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை திட்டம்
-
என்னுடைய இலக்கில் வென்றுவிட்டேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
எந்த நேரத்திலும் எதுவும் மாறும்; தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது: பிரேமலதா
-
சென்னை வடிகாலில் கொசுவலை போட்டது கவுன்சிலர் ஐடியா: சொல்கிறார் மேயர்