சென்னை வடிகாலில் கொசுவலை போட்டது கவுன்சிலர் ஐடியா: சொல்கிறார் மேயர்

4

சென்னை: ''சென்னையில் வடிகாலில் கொசுவலை ஒரு கவுன்சிலர் ஐடியா கொடுத்ததை அடிப்படையாக வைத்து போட்டு இருக்கின்றனர். மற்றப்படி அவ்வளவு சர்ச்சையாக மாற்றும் அளவுக்கு அது ஒரு விஷயம் இல்லை'' என மேயர் பிரியா நிருபர்களிடம் விளக்கம் அளித்துள்ளார்.


கொசுத்தொல்லை அதிகரிப்பால், சென்னை மக்கள் திண்டாடி வரும் நிலையில், கொசுக்களின் பெருக்கத்தை கட்டுப்படுத்த, மழைநீர் வடிகால்வாய்க்கே கொசுவலை போர்த்தும் நுாதன முயற்சியில், சென்னை மாநகராட்சி ஈடுபட்டதாக புகைப்படங்கள் வெளியானது. இது குறித்து மேயர் பிரியா நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கொசுக்களுக்காக போடுவது கிடையாது.

ஒரு கவுன்சிலர் கோரிக்கை விடுத்து இருக்கிறார். இது மாநகராட்சியின் அறிவிப்பாக வெளியிட்டு வந்து போட்டது கிடையாது. ஒரு கவுன்சிலர் ஐடியா கொடுத்ததை அடிப்படையாக வைத்து போட்டு இருக்கின்றனர். மற்றப்படி அவ்வளவு சர்ச்சையாக மாற்றும் அளவுக்கு அது ஒரு விஷயம் இல்லை. இவ்வாறு மேயர் பிரியா கூறினார்.

Advertisement