சிமென்ட் சாலை அமைக்க பூமி பூஜை

கோபால்பட்டி: -கோபால்பட்டியில் 14-வது நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சம் மதிப்பிலான சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை விழா நடந்தது.

தி.மு.க., மேற்கு மாவட்ட பொருளாளர் க.விஜயன் தலைமை வகித்தார். சாணார்பட்டி தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் தர்மராஜன், ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர் பாலகுரு, வேம்பார்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் கந்தசாமி, தி.மு.க., நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, பாக்கியராஜ், ஒன்றிய பொறியாளர் பிரிட்டோ, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ், வேம்பார்பட்டி ஊராட்சி செயலர் மார்ட்டின் கென்னடி கலந்து கொண்டனர்.

Advertisement