ஈர நில பாதுகாப்பு தினத்தையொட்டி ஓவியம், ஸ்லோகம் எழுதும் போட்டி

நாமக்கல்: நிலத்தடி நீர் மேலாண்மை, வெள்ளத்தடுப்பு, பல்லுயிர் பெருக்கம், காலநிலை மாற்ற தணிப்பில் சதுப்பு நிலங்களின் முக்கிய பங்கை வலியுறுத்தும் வகையில், ஆண்டுதோறும், பிப்., 2ல், உலக ஈர நில பாதுகாப்பு தினம் கொண்டா-டப்படுகிறது.


உலக ஈர நில பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, மாவட்ட வனத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்-துறை சார்பில், நாமக்கல் அரசு மகளிர் மேல்-நிலைப்பள்ளியில், ஓவியம் மற்றும் விழிப்பு-ணர்வு வாசகம் எழுதும் போட்டி நடந்தது. மாவட்ட வன அலுவலர் மாதவியாதவ் அறிவுரைப்படி, மாவட்ட வனச்சரகர் பழனிசாமி தலைமை வகித்தார். கண்காணிப்பாளர் கலா முன்னிலை வகித்தார். 'ஈர நிலங்களும், பாரம்பரிய அறிவும் கலாசார பாரம்பரியத்தை கொண்டாடுதல்-2026' என்ற தலைப்பில் நடந்த இப்போட்டிகளில், மாவட்டம் முழுவதும் இருந்து, 170 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். தலைமையாசிரியர் சுமதி, வனவர் முரளி, மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருஞானம், ஆசிரியர்கள், வனத்துறையினர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement