போலீஸ் வாகனம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு; கைதியை கொல்ல முயன்றதால் அதிர்ச்சி
பெரம்பலூர்: பெரம்பலூரில் ரவுடியை அழைத்துச் சென்ற போலீஸ் வாகனத்தின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி காளி என்கிற வெள்ளகாளி. இவரை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு, சென்னை புழல் சிறைக்கு போலீஸ் ஜீப்பில் அழைத்துச் சென்றனர்.
பெரம்பலூர் மாவட்டம் திருமாந்துறை சுங்கச்சாவடி அருகே 15 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடி குண்டு வீசி கைதி காளியை வெட்ட முயன்றனர். இதனை தடுக்க போலீசார் முற்பட்டுள்ளனர். அப்போது போலீஸ் ஜீப் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்துள்ளது.
காயமடைந்த போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
யார் மீது பழிபோடப் போகிறார்
இதனிடையே, சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில், ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதல்வர் ஸ்டாலின், இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது அறிக்கை; தமிழக சட்டசபையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தன் முதுகை தானே தட்டிக்கொண்டு பெருமை பேசி வந்த நேரத்தில், திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள பெரம்பலூர் சுங்கச்சாவடி அருகே காவல்துறை வாகனம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசியிருக்கிறார்கள்.
பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட மதுரையைச் சார்ந்த வெள்ளை காளி என்ற ரவுடியை காவலர்கள் விசாரணைக்காக அழைத்து செல்லும் போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இந்த வெடிகுண்டு வீச்சில் ரவுடியின் பாதுகாப்பிற்காக வந்த 4 காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
குற்றச் செயல்களில் ஈடுபடும் காவல்துறையை பார்த்தோ, இந்த அரசை பார்த்தோ கிஞ்சித்தும் அச்சமில்லை என்ற நிலைதான் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைக்கும் நிலையில், ஆட்சி சக்கரத்தை ஏனோ தானோ என்று சுழற்றி வரும் முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு யார்மீது பழிபோடப் போகிறார் என்று தெரியவில்லை. காவல்துறையை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்காத முதல்வர் ஸ்டாலினை வன்மையாக கண்டிக்கிறேன், இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
துருப்பிடித்த இரும்புக் கரம்... டோட்டல் வேஸ்ட். போலீஸ் துறை பொறுப்பு அமைச்சர் ராஜினாமா செய்
கொலை, கற்பழிப்பு முயற்சி போன்ற கொடுஞ்செயல் நீதிமன்ற வழக்கில் வலுவிழந்து வருவது தான் குற்றவாளி தைரியத்திற்கு முதல் காரணம். இதில் போலீஸ், ஸ்டாலினை குறை சொல்ல அரசியல் காரணம் மட்டும் தான் இருக்கும். போலீசார் குற்றவாளியை முறைத்து கூட பார்க்க முடியாது. சட்ட சிக்கல் உருவாகும். ஒன்று குற்ற செயலை ஒப்புதல் தர வக்கீல் நீதிபதிக்கு உதவ வேண்டும். அல்லது குற்றவாளிக்கு உடந்தையாக இருக்கும் வக்கீல் மீது உள்துறை நடவடிக்கை எடுக்க சட்ட மசோதா தாக்கல் செய்ய வேண்டும்.
திராவிஷ ரவுடிகளின் ஆட்சியில் இதெல்லாம் சகஜமப்பா.
குஜராத்தில் பேரி கார்டை உடைத்து கொண்டு மது பாட்டில்களுடன் சென்ற கார் பற்றி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
உடன்பிறப்பே நம்மை போன்ற கொத்தடிமைகள் குஜராத்தில் எது நடந்தால் என்ன.... கேடுகெட்ட இழி பிறவி ஒன்கொள் கோவால் புற திருட்டு திராவிட கொள்ளையனுக்கு ஓட்டு போட்டு விட்டதால் இங்கு நடக்கும் சட்ட விரோத செயல்களும்மும்சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக்கும் நம்ப தலீவர் இழி பிறவிக்கு ஏதோ முட்டு கொடுக்க வேண்டும் என்று நமக்கு சம்பந்தம் இல்லாத மாநிலத்தில் நடப்பதை தொடர்பு படுத்துகிராயே.. உம் பெயர் நம் தலீவர் சோன முத்தனின் பேரன் இன்ப முத்தனின் பேரன் காலத்திலும் நிலைத்திருக்கும்....
என்னுடைய இலக்கில் வென்று விட்டேன். இன்று இரும்புக்கரம் புகழ் ஸ்டாலின் பெருமிதம். இன்னொரு முறை தேர்ந்தெடுத்தால் நம் கதி? .
ஜோக்கர் போலீஸ். சுட்டு தள்ளிஇருக்க வேண்டாம் . தற்போது போலீஸ் தான் எல்லோருக்கும், ரௌடிகளுக்கு பயப்படுகிறது. கேடுகெட்ட ஆட்சி , கேடுகெட்ட தலைமை அமைச்சர்
இதுதான் அமைதிப் பூங்காவான தமிழகத்தின் லக்ஷணம்
. உமது ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. நீரோ சட்டசபையில் உமக்கு நீரே பெருமையடித்து கொண்டிருக்கிறார். வெட்கக்கேடு.
ரௌடி பாதுகாப்பாக இருப்பது, மகிழ்ச்சி.
இங்கே முட்டு தரும் 200ரூ கேவல ஊபிஸ் எவனும் வரமாட்டான்
இன்னும் ஒவ்வொரு நீதிமன்றம் ஆக அழைத்து செல்லும் நடைமுறை ஐ ஒழித்து ஆன்லைன் மூலம் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தினால் செலவு அலைச்சல் மற்றும் சட்டம் ஒழுங்கு உருப்படும்மேலும்
-
இந்தியாவில் நிபா வைரஸ் பாதிப்பு; அச்சப்பட வேண்டாம் என்கிறது உலக சுகாதார நிறுவனம்
-
டில்லி காந்தி நினைவிடத்தில் பிரதமர் மோடி, சிபிஆர் மரியாதை
-
சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கு இதுவே பயங்கர சாட்சி: இபிஎஸ் குற்றச்சாட்டு
-
வாரிசு அரசியல் என்பது இத்துப்போன குற்றச்சாட்டு; சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்
-
சபரிமலை ஐயப்பன் கோவில் தங்கம் திருட்டு விவகாரம்; நடிகர் ஜெயராமிடம் விசாரணை
-
ஈரானை நோக்கி பயணிக்கும் அதிநவீன போர்க்கப்பல்கள்: டிரம்ப் தகவல்