நவபாஷாண சிலை பாதுகாப்பு குழு ஆலோசனை
பழநி: பழநி முருகன் கோயில் தலைமை அலுவலகத்தில் நவபாஷாண சிலை பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் ஓய்வு நீதிபதி பொங்கியப்பன் தலைமையில் நடைபெற்றது.
பழநி முருகன் கோயில் உள்ள நவபாஷாண சிலை பாதுகாப்பு குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஓய்வு பெற்ற நீதிபதி பொங்கியப்பன் தலைமையிலான சிலை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டது. இதற்கான ஆலோசனை கூட்டம் நேற்று (ஜன.23) பழநி முருகன் கோயில் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
சிவகங்கை பிச்சை குருக்கள், சரவணம்பட்டி ஆதினம் குமரகுருபர அடிகளார், பழநி செல்வ சுப்பிரமணியம் குருக்கள், கோயில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பிரமணியன், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து, முன்னாள் இணை கமிஷனர் நடராஜன், பழநி நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி பங்கேற்றனர்.
நீதிபதி பொங்கிப்பன் கூறுகையில், பழநி கோயில் நவபாஷாண சிலை பாதுகாப்பது குறித்த வழக்கமான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்று உள்ளது என்றார்.
மேலும்
-
என்னுடைய இலக்கில் வென்றுவிட்டேன்: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம்; சவரனுக்கு ரூ.560 அதிகரிப்பு
-
எந்த நேரத்திலும் எதுவும் மாறும்; தேர்தலுக்கு இன்னும் நிறைய காலம் இருக்கிறது: பிரேமலதா
-
சென்னை வடிகாலில் கொசுவலை போட்டது கவுன்சிலர் ஐடியா: சொல்கிறார் மேயர்
-
கிரீன்லாந்தில் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு; கனடா எதிர்ப்பதாக டிரம்ப் குற்றச்சாட்டு
-
'தொண்டர்களை தினமலர் படிக்க வைத்தேன்'